Web Ads

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த இன்கம்டேக்ஸ் ரைடு.. சூர்யாவுக்கு வந்த சிக்கல், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 09-04-25
Moondru Mudichu Serial Today Promo Update 09-04-25

நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் கல்யாணத்திடம் காசு கொடுத்து நந்தினிக்கு புடிச்ச செடி கொடி எல்லாம் வாங்கி கொடு என்று சொல்லி விட்டு செல்ல, இது மாதிரி மாமனார் யாருக்கு கிடைப்பாங்க என்று சொல்லிவிட்டு எனக்கு கொஞ்சம் வீட்டில் வேலை இருக்கு என்று சொல்லி ரேணுகாவை கூப்பிட்டு நந்தினி அழைத்துச் சென்று பூச்செடிகளை வாங்கி வருமாறு அட்ரஸ் சொல்ல இருவரும் வருகின்றனர். புருஷனை மதிக்காத இந்த காலத்துல மாமனார் உங்களை இப்படி பார்த்துக்கிறாரே நீங்க கொடுத்து வச்சவங்க தான் என்று சொல்ல ஆமாம் என்று நந்தினி சொல்லிவிட்டு பூ வாங்கும் இடத்திற்கு வருகின்றன. அங்கு இருப்பவர் உங்களுக்கு என்ன செடி வேண்டுமோ வாங்கிக்கோங்க என்று சொல்ல நந்தினி செடிகளை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அர்ச்சனா ரேணுகாவிற்கு ஃபோன் போடுகிறார். எங்க இருக்க நான் நந்தினி கூட செடி வாங்க வந்திருக்கேன் நான் வீட்டுக்கு போயிட்டு போன் பண்றேன் என்று போனை வைத்து விடுகிறார்

நந்தினி ஒரு செடி காட்டி நன்றாக இருப்பதாக சொல்ல அது எல்லாமே வீட்டுக்குள்ள வச்சு வளக்குற செடிதான் என்று சொல்ல, அப்போ வெளியே நிறைய செடி இருக்கு நம்ம வீட்டுக்குள்ள வைக்கிற செடியை வாங்குவோம் என்று சொல்லி மூணு செடியை வாங்குகிறார் அதற்கு 500 ரூபாய் கேட்க மூன்று செடி 500 ரூபாய் வா என்று ஆச்சரியப்பட்டு கேட்கிறார். நாங்களே மண்ணு முதற்கொண்டு எல்லாம் விலைக்கு வாங்கிட்டு வரணுமா என்று சொல்ல ஒரு வழியாக அங்கிருந்து செடிகளை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீட்டிற்கு வருகின்றனர். நந்தினி வாங்கிய செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று ரேணுகாவிடம் சொல்லிக் கொண்டிருக்க கல்யாணம் வருகிறார். செடி எல்லாம் எப்படி இருக்குது அண்ணே என்று கேட்க சூப்பரா இருக்குதும்மா என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா குடித்துக்கொண்டே வருகிறார். எதுக்கு இந்த செடி எல்லாம் புதுசா என்று கேட்க நான் தான் சார் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல சூப்பரா இருக்கு உனக்கு செடி வளர்க்கறது புடிக்கும்னு தெரிஞ்சா நானே வாங்கி கொடுத்திருப்பேன்ல என்று சொல்ல ஐயாவே வாங்கிக்க சொன்னாரு என்று சொல்லிவிட்டு இதுக்கெல்லாம் என்ன பேரு என்று கேட்கிறார்.

அழகா இருந்துச்சு வாங்கிட்டு வந்தேன் இதுக்கு பேர் எல்லாம் தெரியாது என்று நந்தினி சொல்ல, அதற்கு இந்தச் செடி எல்லாம் ஊர் பெயர் தெரியாதவங்களா என்று கேட்க கல்யாணம் ஆரம்பிச்சுட்டாருல என்று நினைக்கிறார். உடனே சூர்யா நீ கல்யாணம் நீ நந்தினி நான் சூர்யா நீ ரேணுகா அப்போ எல்லாருக்கும் பேர் இருக்குதுன்னா அப்ப இவங்களுக்கும் பேர் வைக்கணும் என்று சூர்யா முடிவு எடுக்கிறார். செடி பக்கத்தில் சூர்யா உட்கார பிறகு அவருக்கு சந்தேகம் வருகிறது. இது எல்லாம் ஆம்பள செடியா பொம்பள செடியா என்று கேட்கிறார். உடனே கல்யாணம் நந்தினியை கோர்த்து விட, சூர்யா நீதா கிராமத்தில் வளர்ந்த பொண்ணு எப்ப பார்த்தாலும் எங்க ஊரு மரம் எங்க ஊரு கோலம் என்று சொல்லுவ இப்ப சொல்லு இது ஆம்பள செடியா பொம்பள செடியா என்று கேட்கிறார். எனக்கு அதெல்லாம் தெரியாது சார் நீங்க புதுசா கேக்குறீங்க என்று சொல்ல புதுசா கேட்டாலும் நியாயமாதான கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு கல்யாணத்திடம் கேட்கிறார். அந்த நேரம் பார்த்து என்ன பதில் சொல்லணும் என்று அருணாச்சலம் வந்து கேக்கிறார்.

அருணாச்சலம் செடி எல்லாம் வாங்கியாச்சா என்று கேட்கிறார். எல்லாம் வாங்கியாச்சு ஐயா ஆனா சின்னையாக்கு அதுல தான் சந்தேகம் என்று சொல்ல என்ன சந்தேகம் என்று அருணாச்சலம் கேட்கிறார். இந்தச் செடிக்கு எல்லாம் பேரு வைக்கலாம்னு நெனச்சேன் இந்த செடி எல்லாம் ஆம்பள செடியா இல்ல பொம்பள செடியா என்று தெரியல எப்படி பேர் வைக்கிறது என்று கேட்கிறார். உடனே அருணாச்சலம் போச்சுடா என்று சொல்ல கல்யாணம் எப்படி வந்து சிக்கி இருக்கோம் பாத்தீங்களா என்று சொல்லுகிறார். அதற்கு அருணாச்சலம் செடியில ஆம்பள செடி பொம்பள செடி எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும் நீ பெயர் வை என்று சொல்ல, சூர்யா முதலில் ஒரு செடியை தொட்டு பார்த்து சாப்டா சில்லுனு சூப்பரா இருக்கு அதனால இதுக்கு ஜில்லுனு பேர் வெச்சிடலாம் என்று சொல்ல கல்யாணம் நல்லா ஞாபகம் வச்சுக்கோமா சின்னையா காலை எழுந்தால் நீ தான் கரெக்டா பேர் சொல்லணும் என்று சொல்லுகிறார். உடனே பக்கத்தில் இருக்கும் செடியை தொட அதில் முள்ளாக இருக்கிறது இது என்ன இப்படி கரடு முரடா இருக்கு என்று சொல்லிவிட்டு இதுக்கு ஒரு பக்காவான பேர் இருக்கு டாடி கரெக்டா பொருந்தும் என்று சொல்ல அருணாச்சலம் என்ன பெயர் என்று கேட்கிறார் உடனே சுந்தரவல்லி என சூர்யா சொல்லுகிறார்.

உடனே அருணாச்சலம் நீ பேரு வைக்க வேணாம் சோறும் வைக்க வேணாம் என்று சொல்ல, இதுக்கு பர்பக்ட்டான பெயர் சுந்தரவல்லி தான் என்று சொல்ல,போய் தூங்குடா என்று அனுப்பி வைக்கிறார். மறுநாள் காலையில் சூர்யா விக்ரமை அழைத்துக்கொண்டு வர எங்கடா கூட்டிகிட்டு வந்து இருக்க என்று கேட்க ஆந்திரா பார்டர் என்று சொல்லுகிறார். இங்க எதுக்கு வந்திருக்கோம் என்று கேட்க, எனக்கு ஃபாரின் சரக்கடிச்சு போர் அடிக்குது. அதனாலதான் கள்ளு குடிக்க வந்திருக்கேன் என்று சொல்லி அவர்களிடம் வந்து ஆளுக்கு ஒரு பானை கள்ளு வாங்கி குடிக்கின்றனர்.

பொறந்தா உன்ன மாதிரி பொறக்கணும் மச்சான் காலை எழுந்து காய்கறி கடை, இஎம்ஐ, ஸ்கூல் ஃபீஸ் , கடன்காரன் எந்த பிரச்சனையும் இல்லாம கள்ளு குடிக்கிறதுக்கு பார்டர் தாண்டி வந்திருக்க என்று சொல்லுகிறார். இது என்னடா புளிக்குது கெட்டுப் போயிருக்குமோ என்று கேட்க கள்ளுனா புளிக்க தான் செய்யும் என்று சொல்லுகிறார். மீண்டும் இன்னொரு ரவுண்ட் வாங்கி இருவரும் ரசித்து ருசித்து குடிக்கின்றனர். உடனே போதையில் கண்ணை மூடிக்கொண்டு யாரோ நம்ம கைய புடிச்சுக்கிட்டு மலை உச்சிக்கு கூட்டிட்டு போகிற மாதிரி இருக்கு என்று விவேக் சொல்ல அதற்கு சூர்யா நானும் பக்கத்துல தான் வரேன் தெரியுதா என்று கேட்க விவேக் அப்படியே கனவிலே தேடி பிடிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது

இன்று வெளியான ப்ரோமோவில் இன்கம்டேக்ஸ் ஆபிஸர்ஸ் சுந்தரவல்லி வீட்டுக்கு போக கோபப்பட்ட சுந்தரவல்லி நாளைக்கு மீடியாவில் வரும் அது எவ்ளோ பெரிய அசிங்கம் என்னால அலோ பண்ண முடியாது என்று சொல்லுகிறார். அதற்கு வந்தவர்கள் இன்கம்டேக்ஸ் ரைடுக்கு உங்க அனுமதி தேவை இல்லை மேடம் என்று சொல்லுகின்றனர்.

மறுபக்கம் சூர்யா போலீசிடம் சிக்க அர்ச்சனா அந்த இடத்திற்கு வருகிறார். விக்ரம் இடம் இன்னிக்கு எல்லாமே தப்பா இருக்கு என்று சூர்யா சொல்லுகிறார். சூர்யா சாருக்கு தகவல் சொல்லிடலாமா என்று கேட்க எல்லா ஃபோனும் வாங்கிட்டாங்களே என்று சொல்ல என்னிடம் இருக்கையா என்று நந்தினி சொல்லி அருணாச்சலம் சூர்யாவிற்கு போனை போடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 09-04-25
Moondru Mudichu Serial Today Promo Update 09-04-25