பேரதிர்ச்சியை கொடுக்கும் சுதாகர்.. அதிர்ச்சியில் உறைந்த பாக்கியாவின் முடிவு என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்..!

பாக்யாவிற்கு சுதாகர் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

baakiyalakshimi serial upcoming episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ரெஸ்டாரன்ட் கேட்டு வந்த சுதாகருக்கு பாக்கியலட்சுமி தர சம்மதிக்காததால் உடனே சுதாகர் பிளான் போட்டு அவரது மகனை இனியாவிற்கு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சந்தோஷமாக கல்யாணம் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க அனைவரும் எதிர்பார்த்தவாறு சுதாகர் பாக்யாவிற்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
பாக்யாவை சந்தித்த சுதாகர் உங்க பொண்ணுக்கு நான் வரதட்சணை எதுவும் கேட்கல அதுக்கு பதில் இந்த ரெஸ்டாரன்ட் எழுதி கொடுத்துடுங்க என்று சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைந்து முடியாது சார் என்று சொல்ல, என் பையனும் உங்க பொண்ணு சேர்ந்து வாழணும் தான் நான் நினைக்கிறேன் நாளைக்கு ரிசப்ஷன் நடக்கிறதுக்குள்ள ஒரு நல்ல முடிவா சொல்லுங்க என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் கோபி ரெஸ்டாரன்ட் பத்தி யோசிக்கிறதை விட நம்ம பொண்ணு வாழ்க்கையை பத்தி யோசி என்று சொல்லுகிறார் பாக்யா ரெஸ்டாரன்ட் கொடுக்க சம்மதிப்பாரா? இல்லையா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial upcoming episode update