மீனா கேட்ட கேள்வி, முத்து சொன்ன பதில், விஜயா போட்ட கண்டிஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா கேட்ட கேள்விக்கு முத்து பதிலளித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்க ஸ்ருதி இப்ப ஃபேவரட் மருமகள் இப்ப சமைக்கிற மருமகள் ஆயிட்டாங்களா என்று கிண்டல் அடிக்கிறார். நீங்க எழுதின கதை வசனங்கள் எல்லாமே சூப்பர் ரோகினி.அந்த மண்டபத்துல தான் மலேசியா மாமா இருந்திருக்காரு ஆனா உங்க கண்ணுக்கு தெரியல முத்துவுக்கு தெரிஞ்சி இருக்காரு இதனால் உங்க கதைக்கு முத்து டுவிஸ்ட் கொடுத்துட்டாரு. நீங்க நல்லா கதையை எழுதறீங்க ரோகினி பேசாம சீரியலுக்கு கதை எழுதுங்க நான் ஒன்னும் ப்ரொடியூஸ் பண்றேன் என்று கிண்டல் செய்து மீனாவும் ஸ்ருதியும் சிரிக்கின்றனர். டைட்டில் கூட ரெடி ரோகினி மலேசியா மருமகள் எப்படி இருக்கு என்று சொல்ல என்ன பாத்தா உங்களுக்கு எல்லாம் காமெடியா தெரியுதா என் நிலைமை இப்படியே இருந்துராது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
ரோகினி சென்ற பிறகு சுருதி இவங்களை பத்தின சீக்ரெட் இன்னும் இருக்கு என்று சொல்ல அதற்கு மீனா அவரும் அப்படித்தான் சொல்றாரு என்று சொல்லுகிறார் எப்படி சொல்றீங்க என்று இவ்வளவு நேரம் வெறுப்பேத்துனதுக்கு ஒன்னு அழுது இருப்பாங்க இல்ல, காரணத்தை சொல்லி சமாளிக்க பார்த்திருப்பாங்க ஆனா இவங்க எதுவுமே பண்ணல இதுல ஏதோ ஒன்னு இருக்கு மீனா என்று சொல்லுகிறார். ரோகினி ரூமுக்கு வர மனோஜ் படுத்து கொண்டு இருக்கிறார். தூங்கலையா மனோஜ் என்று கேட்க மனோஜ் எதுவும் பேசாமல் பாய் தலையனை எடுத்துக் கொண்டு வெளியில் வருகிறார் எதிரில் வந்த விஜயா எங்கடா போற என்று கேட்க மாடி மேல போய் படுக்க போறேன் என்று சொல்ல நீ எதுக்கு மாடி மேல போய் படுக்கணும் உனக்கு இல்லாத உரிமையா இந்த வீட்டில என்று சொல்லி ரூமில் படுக்க சொல்லுகிறார் மனோஜ் தயங்க உடனே ரோகினி பார்த்து விஜய்யா அவ கீழ படுக்க மாட்டாளா அவள கீழ படுக்க சொல்லிட்டு நீ பெட்ல படு இவ்வளவு நாளா தான் மலேசியா மகாராணி மாதிரி எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருந்தா என்று சொல்லி மனோஜ் அனுப்பி வைக்கிறார் . மனோஜ் உள்ளே சென்று அமைதியாக எதுவும் பேசாமல் கட்டில் மீது படுக்க ரோகினி அழுது கொண்டே இருக்கிறார்.
மறுபக்கம் முத்து,மீனா விஜயா நடந்து கொள்ளும் விதத்தை பற்றி பேசுகின்றனர். மீனா ரோகினி மீது பாவம் பார்க்க அதற்கு முத்து இவ்வளவு நாளா அம்மா திட்டும் போது மீனா பாவம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கா அந்த பார்லர் அம்மா இன்னும் போட்டு தான் விட்டு இருக்கு அதுக்கெல்லாம் பாவம் பாக்காத இப்ப அம்மா சப்போர்ட் இல்லன்னு அமைதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிற அதுக்கு நான் உங்க அம்மா பண்றது எல்லாம் ரொம்ப ஓவர்ங்க என்று சொல்லுகிறார் ஆமா இப்ப கூட மனோஜ் வெளிய படுக்க வந்த ஆனா பார்லர் அம்மாவை கீழ்ப்படுக்க சொல்லிட்டு அவன மேல படுக்க சொல்லிட்டாங்க என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வித்தியா போன் பண்ணுகிறார்.
காதலுக்கு சம்மதித்த விஷயத்தை சொல்ல மீனாவும் சந்தோஷப்பட்டு அப்புறம் என்ன கல்யாணம் தானே என்று சொல்ல வித்யா இன்னும் கொஞ்ச நாள் பழகி பார்த்துட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்ல சரி எப்படி இருக்கும் பண்ணுங்க என்று சொல்கிறார். உடனே முத்து அன்புக்கும் இருக்கிற என்கிட்ட பேசுது என்று கேட்க தெரியலைங்க ரொம்ப நாளாவே நான் அவங்க கேட்கிற டவுட் பதில் சொல்லி தான் இருக்கேன் என்று சொல்ல அப்போ என்ன மட்டும் அது மாதிரி பண்ணாதன்னு சொல்லுவ என்று சொல்ல உங்கள மாதிரி நான் முட்டாள் தனமா யோசிக்க மாட்ட அறிவா தான் யோசிப்பேன் என்று சொல்ல முத்து கோபித்துக் கொள்கிறார் உடனே மீனா சமாதானம் செய்து விடுகிறார்.
மறுபக்கம் ஸ்ருதி ரோகிணிக்கு ஒரு மேக்கப் ஆர்டர் வந்திருப்பதாக சொல்லுகிறார்.அதற்கு ரவி என்ன சொல்லுகிறார்? ஸ்ருதியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
