சுந்தரவல்லி சொன்ன வார்த்தை பதிலடி கொடுத்த சூர்யா வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் நந்தினியிடம் வந்து பேச நீங்க எங்கள வாழ வச்ச தெய்வம் நீங்க போய் என்கிட்ட வந்து குற்ற உணர்ச்சி என்றெல்லாம் சொல்லு கிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி இவனுக்கு எப்படி இருந்தாலும் பரவால்ல ஆனா எனக்கு அந்தஸ்து கௌரவம் தான் முக்கியம் என்று கோபமாக பேசுகிறார்.
உடனே சூர்யா டாடி அவங்க சொல்றத உடனே ஆர்டர் பண்ணி வாங்கி கொடுத்திடுங்க பாக்கவே பாவமா இருக்கு இல்ல நந்தினி என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
