Web Ads

முத்து சொன்ன வார்த்தை, ரோகினியின் பாசத்தை உணர்வாரா மனோஜ்? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ad 2

ரோகிணி,மனோஜ் மீது வைத்திருக்கும் காதலை உணர்வாரா?இல்லையா? என்பது குறித்து பார்க்கலாம்.

siragadikka asai serial today episode update 07-04-25
siragadikka asai serial today episode update 07-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சவாரி ஒருவரை இறக்கிவிட்டு கிளம்ப அதே வழியில் முருகன் வர முத்துவை பார்த்த உடன் கூப்பிடுகிறார் உங்கள தானே பாக்கணும்னு நினைச்சேன் என்று சொல்லுகிறார். அண்ணனுக்கு போன் பண்ண ஷெட்ல இருக்கிறதா சொல்லிட்டு இருந்தார் என்று சொன்னேன் எனக்கு போன் பண்ணி இருக்க வேண்டியது தானே என்றும் முத்து சொல்லுகிறார். சரி என்ன விஷயம் சொல்லு என்று சொல்ல இன்னிக்கு என் வாழ்க்கையில முக்கியமான நாள்ல என்று சொல்கிறார் உடனே முத்து பிறந்தநாளா என்று கேட்க எப்படி நான் இவ்வளவு கரெக்டா கண்டு பிடிச்சீங்க என்று கேட்கிறார். கல்யாணம் ஆகத்துக்கு முன்னாடி வரைக்கும் பசங்களுக்கு பிறந்தநாள் தான் முக்கியமான நாளா இருக்கும். அதுக்கப்புறம் தான் எல்லாமே மாறி போயிடும் என்று சொல்லுகிறார்.

சரி லவ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு யாரையாவது லவ் பண்றியா என்று கேக்குற ஆமா அண்ணே என்று சொல்லுகிறார். முதல்ல அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சா விசாரிச்சியா என்று கேட்க அதெல்லாம் விசாரிச்சிட்டேனா இன்னும் கல்யாணம் ஆகல அவங்க கிட்ட இப்ப லவ்வ சொல்ல தான் போறேன் கோயிலுக்கு போயிட்டு அப்படியே அவங்க வீட்டுல போய் லவ் சொல்ல போறேன் என்று சொல்ல முத்து, அதுக்கு அதுக்குன்னு ஒரு கோயில் இருக்கு முன்னாடி எல்லாம் நானே நம்ப மாட்ட கார் பூஜை பண்ண ஒரு கோவிலுக்கு போன அதுக்குள்ள எனக்கு மூணு மாசத்துல கல்யாணம் ஆயிடுச்சு என் பொண்டாட்டி தான் இதெல்லாம் சொல்லுவா நான் உன்னை அந்த கோயிலுக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி அழைத்து செல்கிறார்.

மறுபக்கம் மீனா சந்திராவை கோவிலில் சந்தித்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல அவர் அதிர்ச்சியாகிறார். இந்த ரோகினி இவ்வளவு பொய் சொல்லி இருக்காளா உங்க மாமியாரு நீ சின்ன விஷயம் செஞ்சாலும் அது பெருசா ஆக்கி உன்னை திட்டிக்கிட்டு இருப்பாங்க அவளும் உங்க மாமியார் கூட சேர்ந்துகிட்டு பேசுவா ஆனா இப்போ எவ்வளவு பொய் சொல்லி இருக்கா இது உங்க மாமியார் எப்படி ஏத்துப்பாங்க என்று சொல்ல அதுதான் வீட்ல ஒரு பிரச்சினையை வெடிச்சுக்கிட்டு இருக்கு அவங்களால அதை ஏத்துக்கவே முடியல, அதனாலதான் ரோகினிய வீட்டை விட்டு அனுப்பிட்டு மனோஜ் கிட்ட பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்க அப்புறம் பாட்டி வந்து தான் எல்லாத்தையும் சரி பண்ணாங்க என்று சொல்லுகிறார்.

அப்போ ஸ்ருதியாவது உண்மையான பணக்கார பொண்ணு தானே என்று சந்திரா கேட்க நீ என்னமா இப்படி பேசுற அவங்க எல்லாம் உண்மையான பணக்காரவங்கதான் அதுவும் இல்லாம சுருதி ரொம்ப நல்ல பொண்ணு எனக்கு டெக்கரேஷன் பண்ணும் போது பணம் பத்தலைன்னா உதவி பண்ணி இருக்கா எனக்கு எப்பவுமே சப்போர்ட் இருக்கு என்று சொல்ல அந்த பொண்ணு நாங்க வந்தா கூட மரியாதையாக தான் பேசும் நல்ல பொண்ணு தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உடனே மீனா சீதா எங்கம்மா என்று கேட்க கோவில்ல தான் ஃபிரண்ட் கூட பேசிகிட்டு இருக்கா என்று சொல்ல மீனா நானே போய் பாத்துக்குறேன் என்று உள்ளே வருகிறார்.

சீதா பிரண்டை பேசி அனுப்பி விட்டு வர அந்த நேரம் பார்த்து அருண் வந்து விடுகிறார். இப்ப எதுக்கு நீங்க இங்க வந்தீங்க இங்கிருந்து போங்கம்மா பாத்தாங்கனா பிரச்சனையாகும் என்று பேசிக் கொண்டே இருக்க ஒரு இடத்தில் நின்று இருவரும் பேசிக் கொள்கின்றனர் இன்னும் எவ்வளவு நாள் தான் வீட்ல சொல்லாம இருக்கிறது நான் அம்மாகிட்ட சொல்லிடவா என்று சொல்லுகிறார் இல்லனா உங்க வீட்ல வந்து பேசவா என்று கேட்க இப்ப எதுக்கு இவ்வளவு அவசரப்படுறீங்க கொஞ்ச நாள் பொறுத்து பண்ணிக்கலாம் முதல்ல உங்களை புரிஞ்சுகிட்டு அப்புறம் கல்யாணத்தை பத்தி பேசுவோம் என்று சொல்ல மீனா சீதாவை தேடிக்கொண்டே வருகிறார் அதற்குள் மீனா விடம் அர்ச்சகர் மற்றும் தெரிந்தவர் என பேசிக் கொண்டிருக்க அதற்குள் அருண் சீதாவிடம் பேசிவிட்டு சென்று விடுகிறார் . சீதாவை பார்த்த மீனா இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க பிரண்டு கிட்ட பேசிகிட்டு இருந்தேன் அக்கா என்று சொல்லி அழைத்துச் செல்கிறார்.

உடனே முத்து முருகனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வர, அருண் வெளியே வரும்போது முருகனைப் பார்த்து இருவரும் பேசிக் கொள்கின்றனர் சார் லவ் ஓகே ஆயிடுச்சா என்று கேட்க அருண் ஆயிடுச்சு என்று சொல்லுகிறார் உடனே அருண் அவரை கேட்க இல்ல சார் இதுக்கு மேல தான் சொல்ல போறேன் என்று சொல்ல சீக்கிரமா சொல்லிடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.முருகன் முத்துவிடம் எனக்கு தெரிஞ்ச டிராபிக் இன்ஸ்பெக்டர் நல்ல மனிதர் என்று சொல்ல எனக்கு தான் தெரியுமே என்று சொல்ல அவர் ஒரு பொண்ண லவ் பண்றதா சொன்னாரு என்று சொல்ல லவ் பண்ற பொண்ணு தான் பாவம் என்று சொல்லுகிறார். அதெல்லாம் வேற கதை உள்ள போகலாம் என்று அழைத்துச் செல்ல மீனா சீதா இருவரும் பார்த்து விடுகின்றனர். உடனே மீனா சீதாவிடம் இவர்தான் வீடு வரைக்கும் வந்து பொண்ணு கேட்டது என்று சொல்ல சீதா நீங்கதான் அந்த ரோமியோவா என்று கிண்டல் பண்ணுகிறார். இல்ல சிஸ்டர் எனக்கு தெரியாம இப்படி நடந்துருச்சு என்று சொல்லி உடனே இப்பதான் ப்ரொபோஸ் பண்ண போறேன் அதுக்கு தான் முத்து அண்ணே இந்த கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு போக சொன்னாரு என்று கோர்த்து விட மீனா இன்னும் ஐடியா கொடுப்பதை விடலையா என்று கேட்கிறார்.

பிறகு மனோஜ் ஷோரூம் இல் இருக்க ஹெல்த் இன்சூரன்ஸ் நபர் வருகிறார் அவர் என்ன சொல்லுகிறார்? மனோஜ் என்ன செய்யப் போகிறார்? மனோஜ்க்காக ரோகினி என்ன செய்திருக்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 07-04-25
siragadikka asai serial today episode update 07-04-25