நந்தினி மீது கோபத்தை காட்டிய அர்ச்சனா, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நீ உண்மைய பேசுனது எனக்கு புடிச்சது நந்தினி, உன் மனசுல இருந்தது நீ பேசுன இப்படி பேசுறவங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் என்று சொல்கிறார். எனக்கே என்னை புரிய வச்சிருக்க, நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் எனக்கு பளார்னு அறைந்த மாதிரி இருந்தது. உன்கிட்ட நான் எதுவுமே சொல்லாம தாலி கட்டும்போது உன் மனசு எப்படி இருந்திருக்கும், உன் வாழ்க்கையே திசை மாத்தி இருக்க, இது வேற ஒரு பொண்ணா இருந்தா தாலியை தூக்கி போட்டு போயிருப்பா நான் பண்ண டார்ச்சர் இருக்கு எனக்கு விஷம் வெச்சிருப்பா, இவ்வளவு நாள் நான் உன்ன பத்தி யோசிக்கல நந்தினி, உன்னை இந்த வீட்டில நான் பாதுகாப்பா வச்சிருந்திருக்கணும் நான் அதை செய்ய மறுத்துட்டேன் என்ன மன்னிச்சிடு உன் அசிங்க பட வச்சிட்ட அவமானப்படுத்த வைத்துவிட்டேன் என் மனசுல உன்னது என் தாய் குலத்தை அசிங்கப்படுத்தனும் அவ்வளவுதான் ஆனால் அது உன்னை எவ்வளவு பாதிப்பு என்று நான் யோசிக்காமல் போயிட்டேன்.
ஒரு தடவையாவது உன் பேச்சைக் கேட்டு இருக்கணும், எல்லாமே என் தப்பு தான் என்று சொல்லி பேசி மன்னிப்பு கேட்கிறார். நந்தினி சாப்பிடுவதற்கு முன்னாடி இந்த மாத்திரை போடணும் என கொடுத்துவிட்டு நான் போய் சமைச்சு சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று வருகிறார். மாதவி நந்தினியை கூப்பிட்டு எதுக்கு டிராமா பண்ண கேட்க, நான் எதுவும் ட்ராமா எல்லாம் பண்ணல ஒன்று சொல்ல, அப்ப எதுக்கு சூர்யா கூட ஹாஸ்பிடலுக்கு வந்த என்று கேட்க, அவருக்கு கையில ரத்தம் வரும்போது ஒரு மனிதாபிமானம் இல்லாம எப்படி போக முடியும் என்று கேட்க, அதெல்லாம் சரி தாலியை எதுக்கு கழட்டுல என்று கேட்க, நீங்க ஏன் கழட்டவில்லை என்று கேட்க நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க உங்களை யாராவது இப்படி கேட்டா நீங்க கழட்டி கொடுப்பீங்களா என் தாலியும் உன் தாலியும் ஒன்னா, நீங்க ரெண்டு பேரும் என்ன புருஷன் பொண்டாட்டியாக வாழ போறீங்க அவன் எங்க அம்மாவ வெறுப்பேத்த உன் கழுத்துல தாலி கட்டி இருக்கான் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார்.
ஆனால் நந்தினி சூர்யா சார் எதுக்காக இந்த தாலிய எதுக்காக கட்டினாலும் இந்த தாலி தாலி தான் அது எப்படி கழட்ட முடியும் அதனால தான் என்னால கழட்ட முடியல என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு வருகிறார். இப்பதாமா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லாரையும் வெளுத்து வாங்கிட்ட, எல்லாரையும் கரெக்டா கேள்வி கேட்டு பேசின என்று பாராட்ட நான் அதிகம் பேசிட்டேனா என்று சொல்ல நீ கரெக்டாதமா பேசியிருக்க என்று சொல்லுகிறார். எனக்கு பயமா இருக்கு அண்ணா ஏற்கனவே என்ன ஏதாவது பேசிக்கிட்டே இருப்பாங்க இப்ப நான் வேற ஓவரா பேசிட்டேன் என்று சொல்ல, நீ பேசாம வேற யாரு பேசுவாங்க நீ இந்த வீட்டோட எஜமானி அம்மா என்று சொல்ல அப்படியெல்லாம் சொல்லாதீங்கன்னு நான் எப்பவுமே அப்படி நினைக்கல சூர்யா சாருக்கு கையடிப்பட்டதால் தான் இங்க இருக்கேன் சரியான உடனே போயிடுவேன் என்று சொல்லுகிறார். உடனே கல்யாணம் கோபப்பட்டு எப்ப பாத்தாலும் இதையே பேசிக்கிட்டு இருக்காத, எனக்கு கோபம் வந்துரும் என்று சொல்லுகிறார்.
எங்க சின்னையா ரொம்ப நல்லவரு உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு, எல்லாத்துக்கும் வீட்டை விட்டு போறேன்னு சொல்லாத, நீ தான் பார்த்து வாழனும் என்று சொல்லிவிட்டு போக, மறுபக்கம் ரேணுகா அர்ச்சனாவை சந்தித்து வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லுகிறார். இவ்வளவு நடந்திருக்கா அவளுக்காக சூர்யா கையை கிழிச்சுக்கிட்டானா, அவ வீட்ல எல்லாரையும் அவ்வளவு கேள்வி கேட்டா, அப்படியே போயிடுவானு பார்த்தா இதுக்கு அப்புறம் இன்னும் திமிரா வந்து நிக்கிறா என்று சொல்ல அர்ச்சனா டென்ஷனாகிறார். எனக்கு கேட்காமல் நீ எதுவும் பண்ணாத என்று சொல்லிவிட்டு ரேணுகாவை அனுப்பி விட, காய்கறி உடன் ரேணுகா வீட்டுக்கு வருகிறார். மறுபக்கம் சூர்யா ரூமில் உட்காரா நந்தினி உதவி செய்ய,பிறகு சூர்யா புக் திறக்க முடியாததால் நந்தினி திறந்து கொடுக்கிறார்.
உடனே கொஞ்சம் குளிச்சி ரெடியாகலாமே என்று சொல்ல அப்புறம் குளித்துக்கொள்கிறேன் நந்தினி என்று சொல்ல, துணி மட்டுமாவது சேன்ஜ் பண்ணிக்கோங்க என்று சொல்ல, அப்படியா சரி நான் பண்ணிக்கிறேன் என்று சொல்ல உங்களுக்கு தான் அடிபட்டு இருக்கு இல்ல நான் பண்ணி விடுறேன் வாங்க என்று சொல்ல அந்த நேரம் பார்த்து அர்ச்சனா வீட்டுக்கு வருகிறார். காரை விட்டு இறங்கி இதுக்கு மேல உன்னை எங்க விட்டு வைக்க மாட்டேன் என்று நினைத்து விட்டு உள்ளே வருகிறார். நந்தினி சூர்யாவின் சட்டையை கழட்டி விட்டு மீண்டும் புது சட்டையை எடுக்க, அர்ச்சனா உள்ளே வந்தவுடன் சூர்யா எங்கே என்று கேட்க மேலே இருக்காரு என்று கல்யாணம் சொன்னவுடன் மேலே வர நந்தினி உங்களுக்கு என்ன டிரஸ் வேண்டும் என்று கேட்க சூர்யா சொன்னவுடன் அந்த சட்டையை எடுத்து நந்தினி பட்டனை போட்டுக் கொண்டிருக்க அர்ச்சனா சூர்யா என கூப்பிட வாங்கமா இதுக்கு அங்கயே நிக்கிறீங்க என்று நந்தினி சொல்ல சூர்யா முறைப்பதை நந்தினி கவனித்து விடுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் எதுக்காக சூர்யா அவளுக்காக கையை கிழிச்சுகிட்ட அதெல்லாம் ஒரு ஆளா என்று அர்ச்சனா கேட்க அவள் என் ஆளு அவளுக்காக நான் உயிரை கூட கொடுப்பேன் என சூர்யா சொல்லுகிறார். அர்ச்சனா நந்தினி இடம் நான் இந்த நிமிஷம் வரைக்கும் சூர்யாவா மனசார லவ் பண்றேன் என் முன்னாடியே உன்னை பெருமையா பேசினா எனக்கு எப்படி இருக்கும் என்று கோபப்படுகிறார்.
சூர்யா நந்தினியிடம் நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும் என்று கேட்கிறேன் சொல்லுங்க சார் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
