முத்து செய்த உதவி, சந்தோஷத்தில் அருண், அதிர்ச்சி கொடுத்த அருணின் அம்மா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
அருண் சந்தோஷத்தில் இருக்க அவரது அம்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை பேச வைக்க சாமியாரை வர வைக்கின்றனர் அவர் மனோஜ் வாயில் கற்பூரத்தை எடுத்துப் போட்டுவிட மனோஜ் அலறி அடித்து ஓடுகிறார் பிறகு பேசாமல் இருக்க முத்து இப்ப என்ன பேசணும் அப்படித்தானே என்று சொல்லி ஒரு அடி அடிக்க மனோஜ் பேசுகிறார். பிறகு சாமியார் நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு என்று சொல்லிவிட்டு கிளம்ப மனோஜிடம் விஜயா நீ பேசினதா சொல்லி அவ சொன்னதெல்லாம் அவளா சொன்னதா இல்ல நீ அப்படி தான் பேசுனியா என்று கேட்க மனோஜ் யோசித்து விட்டு நான் அப்படித்தாமா பேசினேன் என்று சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.
ரூமுக்கு சென்றவுடன் ரோகினி மனோஜ்க்கு பால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க பக்கத்துல உக்காந்து பேசுகிறார் என்னைக்குமே நம்ம காதல் குறையாது மனோஜ் நீ எனக்காக ஆன்ட்டிகிட்ட பேசுனதுக்கு ரொம்ப நன்றி அப்போ நிஜமாவே நீ உன்னோட விருப்பத்துக்காக தானே பேசினேன் என்று சொல்ல எத்தனை நாளைக்கு நான் இதே மாதிரி இருக்க முடியும் என்று சொல்லுகிறார் அதற்கு பொய் சொல்லாம இருந்திருக்கணும் என்று மனோஜ் சொல்ல எல்லாமே உனக்காக தான் மனோஜ் இப்பையும் உன் மேல இருக்கிற காதல் எனக்கு குறையல என்று சொல்லி பக்கத்தில் வர மனோஜ் தள்ளி போ என்று சொல்லுகிறார் உடனே ரோகினி முகம் மாறுகிறது அம்மா சொல்லாம நம்மளுக்குள்ள எந்த உறவும் கிடையாது என்று சொல்ல ஒரு புருஷன் பொண்டாட்டி கூட உங்க அம்மாவோட பர்மிஷன் வேணுமா என்று கோபப்பட்டு கீழே படுத்து விடுகிறார்.
மறுபக்கம் முத்து சவாரியை முடித்துவிட்டு நிற்க அந்த வழியாக அருண் எதிரில் போகிறார் இவன் மூஞ்சிலேயே முழிக்க வேண்டியது இருக்கு என்று நினைத்துக் கொண்டிருப்பார் கொஞ்ச நேரத்தில் ஒருவன் செயினை பறித்துக் கொண்டு ஓட முத்து அவனை துரத்திக் கொண்டு ஓட அருண் சத்தம் கேட்ட பின்னாலே வண்டியில் ஓடுகிறார் ஒரு கட்டத்திற்கு மேல் முத்து அவனைத் தடுத்து நிறுத்தி அடிக்க தப்பித்துச் செல்ல அருளும் பின்னாடியே ஓடிவந்து ஒரு வீட்டுக்குள் சத்தம் கேட்டு உள்ளே வருகின்றனர். அங்கே ஒரு ரவுடி அந்த பெண்மணி என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிக் கொண்டு இருக்கா இருவர் வந்தவுடன் வெளியே போக இல்லனா கழுத்தை அறுத்து விடுவேன் என்று சொல்லி மிரட்டி கொண்டிருக்க முத்து ஒரு பொருளை மேலே தூக்கி வீசி அவனை அடிக்க அருணம் சேர்ந்து அடித்து இழுத்துச் சென்று விடுகிறார் பிறகு முத்து அந்த பெண்மணிக்கு தண்ணீர் கொடுத்து இதுக்கு மேல பிரச்சனை இல்ல போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க என்று சொல்ல நீங்களும் போலீசாப்பா என்று சொல்ல இல்ல நான் கார் டிரைவர் என்று சொல்லுகிறார் தைரியமா வந்து காப்பாற்றுவதற்கு ரொம்ப நன்றிப்பா என்று அந்தப் பெண் சொல்லுகிறார். உன் நம்பர் குடுப்பா என்று சொல்ல முத்துவும் லிஸ்டிங் கார்டு கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் ரோகினி தானா உன்னை என் வழிக்கு கொண்டு வரேன் என்று சொல்லி மகேஷுக்கு போன் பேசும்போது மனோஜ் காதல் விழுமாறு பேசுகிறார் நம்பர் வெளிய ஹோட்டல்க்கு லஞ்ச் போகலாம் டேபிள் புக் பண்ணிடு கண்டிப்பா நான் வரேன் எனக்கும் மனசு விட்டு பேசணும் என்றெல்லாம் சொல்ல வெளியில் இருந்து மனோஜ் கேட்டு கடுப்பாகி உள்ளே வர யார்கிட்ட பேசிகிட்டு இருந்த என்று கேட்க வித்யா தான் என்று சொல்லுகிறார் வித்யா கிட்டயா பேசிட்டு இருந்தேன் என்று சொல்ல அம்மா ரொம்ப நாளாச்சு அதனால வித்யாவை பார்த்துட்டு சாப்பிட்டு வர போறேன் என்று சொல்லுகிறார் உடனே ஃபேஸ் டல்லா இருக்கு கொஞ்சம் பிரஷ்ஷப் பண்ணிட்டு வரேன் என்று பாத்ரூம்குள் போக மனோஜ் என்ன செய்வது என புரியாமல் கடுப்பாகிறார். இது ஆதாரத்தோட நிரூபிச்சாகணும் என்று முடிவெடுக்கிறார்.
அருண் அம்மாவிற்கு ஸ்வீட் கொடுக்க என்ன விஷயம் நல்ல விஷயம்தான்மா என்று சொல்லுகிறார் எனக்கு பிரமோஷன் பத்தி பேசி இருக்காங்க சீக்கிரம் ப்ரோமோஷன் கிடைச்சுரும் என்று சொல்ல அருண் அம்மாவும் சந்தோஷப்படுகிறார். என்ன விஷயம் என்று கேட்க நான் ஒரு திருடனை புடிச்சு கொடுத்தேன் அதனால எனக்கு ப்ரமோஷன் கொடுத்திருக்காங்க கமிஷனரும் போன் பண்ணி பாராட்டினாரு என்று எல்லாமே அருண் செய்தது போல முத்து எதுவும் செய்யாதது போல் பேசுகிறார்.
அருணின் அம்மா என்ன சொல்லுகிறார்? அதற்கு அருண் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
