மினிஸ்டர் சொன்ன வார்த்தை, அர்ச்சனா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றும் மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
![moondru mudichu serial promo update](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/moondru-mudichu-serial-promo-update-2.jpeg)
நேற்றைய எபிசோடில் விஜி நந்தினிக்கு போன் போடுகிறார். விஜி நந்தினியிடம் அதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை என்று கேட்க எல்லா பிரச்சனையும் தான் நடந்து முடிஞ்சிருச்சு அதுக்கப்புறம் இன்னும் என்னக்கா இருக்கு. உடனே விஜி சூர்யா அண்ணாவோட அம்மா அப்படி நடந்துப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. நீ பேசாம எங்க வீட்டிலேயே பண்ணி இருக்கலாம் நிம்மதியா இருந்திருக்கும் என்று சொல்ல, ஐயா வற்புறுத்தலைனா நான் அப்படிதான் பண்ணி இருப்பேன். அவங்க அம்மாவும் பையனும் எப்படின்னா போறாங்க ஆனா நடுவுல நான்தான் சிக்கி சீரழிகிறேன் என்று சொல்லி அழ, ஆனால் ஒரு விதத்துல சூர்யா அண்ணா எந்த இடத்திலுமே உன்ன விட்டுக் கொடுக்கல. அப்படியே உங்க அண்ணன் கிட்ட சொல்லி என்ன ஊருக்கு பஸ் ஏற்ற சொல்லுங்க என்று சொல்ல திரும்பி ஆரம்பிச்சுட்டியா நான் போன வைக்கிறேன் என்று சொல்லி வைத்து விடுகிறார்.
மறுபக்கம் சுரேகா,மாதவி மற்றும் அசோகன் என மூவரும் உட்காந்து நடந்த விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றன. இவ்ளோ விஷயத்துலயும் ஒரு நல்லது நடந்திருக்கு ஆயிரம் தான் நந்தினி சூர்யா மேல கோவத்துல இருந்தாலும் சென்டிமென்ட்டா ஒரு விஷயம் பண்ணும்போது கொஞ்சம் கோபம் குறையும் என்று மாதிரி சொல்ல உடனே சுரேகா லவ் வந்துட்டா என்ன பண்றது என்று கேட்க அதுக்கு தான் நாத்தனார் நம்ப இருக்கோம்ல அது எப்படி நடக்கும் என்று பேசிக்கொள்கிறனர்.
மறுநாள் காலையில் நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடிக்கும் சவுண்ட் கேட்டு யார் என்று கேட்க, நாங்க கல்யாண ஆல்பம் எடுத்துக்கொண்டு வந்திருக்கும் காசெல்லாம் பே பண்ணிட்டாங்க, நீங்க சைன் பண்ணிட்டு வாங்கிக்கோங்க என்று சொல்ல ஏற்கனவே ஏசி ரிப்பேர் பண்றவங்க வந்து பிரச்சனையா ஆயிடுச்சு என்று யோசித்து மாதவியிடம் வந்து சொல்லுகிறார்.பிறகு அவர்கள் வந்து ஆல்பத்தை வாங்கிக் கொள்கின்றனர்.
பிறகு ஆவலோடு சுரேகா, அசோகன், ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிச்சனில் நந்தினி இவ்வளவு நாள் இல்லாம இப்ப ஆல்பத்தை கொண்டு வந்திருக்காங்க இதனால என்ன பிரச்சனை வரப்போகுதோ தெரியல என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி பார்க்க, என்ன பாத்துக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். போட்டோ என சமாளிக்க ஆல்பம் மாதிரி இருக்கு என்று கேட்டு, வாங்கிட்டு வாங்க மாப்பிள்ளை என்று சொல்ல அவரும் மாதவியிடம் இருந்து ஆல்பத்தை வாங்கி சுந்தரவல்லி இடம் கொடுக்கிறார்.
நடந்தது ஒரு கல்யாணமே கிடையாது இது ஒரு ஆல்பம் ஒரு கேடு என்று சொல்லுகிறார். உடனே சுரேகா நாங்க தேடி போய் எல்லாம் வாங்கலாமா அவங்களே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாங்க என்று சொல்ல நல்லா பேசுற என்று சொல்லிவிட்டு ஆல்பத்தை திருப்பி பார்த்துக்கொண்டே வருகிறார். அதில் சூர்யா நந்தினி கழுத்தில் தாலி கட்டியதை பார்த்தவுடன் ஆல்பத்தில் இருந்து கிழித்து தூக்கிப் போட சூர்யா வந்து நிற்கிறார். உடனே கையில் எடுத்த சூரியா என் செல்ல குட்டி ஓட போட்டோ எவ்வளவு அழகா இருக்கு. என்ன ஒரு போட்டோ என்ன ஒரு அழகு என்று முத்தம் கொடுக்கிறார். யார் இதை கிழித்தது என்று கேட்க, அசோகன் ஒன்றும் புரியாமல் நிற்கிறார்.
என் தங்கம், தேவதை மாதிரி இருக்கா என எப்படி பார்க்கிறா பாரு சூப்பர் என்று மீண்டும் முத்தம் கொடுக்க சுந்தரவல்லி டென்ஷன் ஆகி உள்ளே சென்று விடுகிறார். மறுபக்கம் மினிஸ்டருக்கு டீ கொடுத்த மனைவி இந்த அர்ச்சனா ஏங்க இப்படி இருக்கா, எப்படி இருக்கா என்று கேட்க ரூமுக்குள்ளே இருக்கா சூர்யாவ பத்தி மட்டும் பேசுறா என்றெல்லாம் சொல்ல எல்லாமே சரியாக விடு பார்த்துக்கலாம் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து இருவர் வந்து கல்யாண ஆல்பம் என நிற்கின்றனர். யார்ரா நீங்க நின்னு போனா கல்யாணத்துக்கு ஆல்பத்தை எடுத்துக்கிட்டு வரீங்க போங்கடா என்று சொல்லி அனுப்ப அர்ச்சனா நில்லுங்க என்று சொல்லி ஆல்பத்தை வாங்கிக் கொள்கிறார். மினிஸ்டர் இது எதுக்குமா நம்பளுக்கு என்று சொல்ல, ஆல்பத்தின் மேல் சூர்யா அர்ச்சனா என இருப்பதை பார்த்து நிற்கிறார் அர்ச்சனா எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் ஆல்பத்தை பார்த்தா அர்ச்சனா இந்த போட்டோவை பார்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் சூரியன் என்னால வச்சிருந்தா பாசம் தான் என் கண்ணுக்கு தெரியுது. ஏதோ தெரியாம அந்த வேலைக்காரி கழுத்துல தாலி கட்டிட்டான்.
என்னைக்கா இருந்தாலும் சூர்யா எனக்குத்தான். மினிஸ்டர் உடனே நீ நினைக்கிறது உனக்கு கிடைக்குமா என்று சொன்னால் அர்ச்சனா ஐ நோ பா என்று சொல்லுகிறார்.
பிறகு நந்தினி கோவிலில் எனக்கு வர எல்லா பிரச்சனைக்கும் காரணம் சூர்யா சார் தான் சூர்யா பக்கத்தில் வந்தாலும் பிரச்சனை தானா வந்தது நான் அவரை விட்டு பிரிந்து போக தான் போறேன் என்று சாமி இடம் வேண்டிக்கொள்கிறார் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
![moondru mudichu serial promo update](https://kalakkalcinema.com/wp-content/uploads/2024/12/moondru-mudichu-serial-promo-update-3.jpeg)