Pushpa 2

இன்னும் ஐந்து வாரம் தான் இருக்கிறது.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

biggboss tamil 8 day 70 promo 3

biggboss tamil 8 day 70 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் கடந்த வாரத்தோடு கேப்டன்சி எப்படி இருந்தது என்று விஜய் சேதுபதி கேட்க போட்டியாளர்கள் அனைவரும் பதில் சொல்லுகின்றனர். அதில் முத்துக்குமரன் எல்லா கேப்டனும் மரியாதைக்குரிய இடத்திலிருந்து இருக்காங்க ஆனா இவர் மட்டும் பரிதாபத்துக்குரிய இடத்தில் இருந்தார் என்று சொல்லுகிறார். மற்ற போட்டியாளர்களும் ரஞ்சித் கேப்டன்சி குறித்து நெகட்டிவ்வாக பேசுகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இன்னும் ஐந்து வாரங்கள் மட்டுமே இருப்பதால் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று விஜய் சேதுபதி கேட்க போட்டியாளர்கள் தனித்தனியாக வந்து அவர்களது பதிலை சொல்லுகின்றனர் அதற்கு சௌந்தர்யா ஐந்து வாரம் கடந்து போனாளே வெற்றிதான் என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.