மாதவி போட்ட பிளான், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி நந்தினி குடும்பத்தை அசிங்கப்படுத்தியதால் சூர்யா கோபமாக பேசுகிறார். உடனே நந்தினி நீங்க இப்ப பேசுறதும் பிரச்சனையாகும் சார் வேண்டாம் நாங்க இப்பவே கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன் என்று சொல்ல ஒரே நிமிஷம் நந்தினி, ஒரே நிமிஷம் என்று சொல்லிவிட்டு இவங்க நம்ம தோப்பில் வேலை செய்யறவங்களா அதெல்லாம் பழைய கதை, இப்போ கிரேட் பிசினஸ்மேன் அருணாச்சலத்தோட சம்பந்தி என்னோட மாமனார் பேமிலி என்று நெஞ்சை தட்டி சொல்லுகிறார். இவங்க ஊருக்கு வந்து போனா எப்படி போகணும் கெத்தா போகணும் ஆனா நடந்து போயிட்டு இருக்காங்க. அப்படி இருந்தா உங்க கௌரவம் என்ன ஆகும் அவங்க போய் டவுன் பஸ்ல இறங்கினா ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க அதனாலதான் நான் கெஸ்ட் ஹவுஸில் இருக்க கார வர சொல்லி இருக்கேன் என்ற விசில் அடிக்க கார் வந்து நிற்கிறது.
நந்தினி வேண்டாம் என்று சொல்ல இவங்கெல்லாம் தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிட மாட்டாங்க கொஞ்சம் ஸ்டேட்டஸ் கொஞ்சம் கௌரவம் இதையெல்லாம் சாப்பிடறவங்க இவங்களுக்கு இதுதான் முக்கியம் என்று சொல்லி அவர்களை கார்கிட்ட அழைத்து வர நந்தினி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர்கள் குடும்பத்தினரை காரில் வழி அனுப்பி வைக்கிறார். இதனால் சுந்தரவல்லி கோபமாகி உள்ளே சென்று விடுகிறார். புஷ்பா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கல்யாணம் மல்லிகைப் பூவுடம் வருகிறார். அந்த நேரம் பார்த்து சூர்யா வந்து கல்யாணம் இங்க என்ன நடக்குது என்று கிண்டல் அடிக்கிறார். பெயர்ல இருக்குற கல்யாணத்த நேர்ல நடத்தி பாக்கணும்னு ஆசை இருக்கா என்று சொல்லுகிறார்.
உடனே நந்தினி கிச்சனுக்கு வர ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே தங்கச்சிமா என்று சொல்ல எனக்கு ரெஸ்ட் எடுக்கிறது எல்லாம் வேலைக்கே ஆகாது இன்னிக்கு புல்லா நான் தான் சமைக்கலாம்னு இருக்கேன் என்று நந்தினி சொல்லுகிறார். பிரண்டை துவையலும், உருண்டை குழம்பு மற்றும் பாசி பருப்பு பாயாசம் வைக்கலாம் என்று நந்தினி சொல்ல,நான் இதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லம்மா என்று சொல்லுகிறார். உடனே மூவரும் சமைக்க ஆரம்பிக்கின்றனர் புஷ்பாவும் கல்யாணமும் உதவி செய்ய நந்தினி சமைக்கிறார். வாசனையே ஆல சுண்டி இழுக்குது, இது எல்லாருக்கும் புடிச்சி போயிடுமே என்று கல்யாணம் சொல்ல நந்தினி ஆனா ஒன்னு இத நான் சமைச்சேன்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் நீங்க ரெண்டு பேரும் சமச்சதாவே இருக்கட்டும் என்று சொல்ல இவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சதுன்னு நாங்க செஞ்சதா சொல்லனுமா எப்படிமா என்று சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது எல்லாமே நீங்கதான் செஞ்சி இருக்கீங்க என்று சொல்லி அனைத்தையும் எடுத்து வைக்க சொல்லுகிறார்.
பிறகு கல்யாணமும் புஷ்பாவும் அனைவருக்கும் பரிமாற அருணாச்சலம் இன்னைக்கு சமையலே வாசனை தூக்குதே என்று சொல்ல நானும் புஷ்பாவும் புதுசா கத்துக்கிட்டு செஞ்சிருக்கோம் என்று சொல்ல, உனக்கு காபியை வைக்க தெரியாது இதெல்லாம் இது வேறயா என்று சொல்லுகிறார். சுரேகா என்னகா குழம்புல உருண்டையா இருக்கு என்று சொல்ல,அருணாச்சலம் இதுக்கு பேரு உருண்டை குழம்பு நானே சின்ன வயசுல தான் சாப்பிட்டு இருக்கேன்னு சொல்லுகிறார். பிறகு எல்லோரும் சாப்பிட்டு நல்லா இருக்குன்னு சொல்றாங்க சரி நானும் சாப்பிட்டு பார்க்கிறேன் என்று சொல்ல சுந்தரவள்ளியும் சாப்பிட்டு நல்லா இருக்கு என்று சொல்லுகிறார். இது என்ன கலர் டிஃபரண்டா இருக்கு என்று கேட்க பெயரை மறந்து விட்டதாக சொல்லி கிச்சனுக்கு ஓடிப் போய் அது என்ன தொவையல் என்று கேட்கிறார் அது பிரண்டை துவையல் என்று நந்தினியை கேட்டு வந்து சொல்லி விடுகிறார்.
பிறகு சுந்தரவல்லி இது ஸ்வீட்டுனு தெரியுது ஆனா இது என்ன ஸ்வீட் புதுசா இருக்கு என்று கேட்க அயோ திரும்பவும் நம்ம கிட்டயே கேக்குறாங்களே என்று திருத்திருவன முழிக்கிறார். உடனே சுடுதண்ணி எடுத்துட்டு வரேன் என்று சொல்லி நந்தினியிடம் பாயாசத்தின் பெயரை கேட்டு வந்து பாசிப்பருப்பு பாயாசமா என்று சொல்லுகிறார். எல்லாமே சூப்பரா இருக்கு செஞ்ச கைக்கு தங்க விலை போடலாம் போல கல்யாணம் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து சூர்யா வருகிறார்.
என்ன டாடி செம ஸ்மெல் வருது என்று சொல்ல பாயாசத்தை எடுத்து டேஸ்ட் செய்து சூப்பரா இருக்கு டாடி என்று சொல்ல ஆனா என்று இழுக்க, அருணாச்சலம் ஆனானா என்ன என்று கேட்கிறார் இது இவங்க ரெண்டு பேர் செஞ்சதே கிடையாது எனக்கு தெரியும். நான் வேணும்னா பெட்டு கட்றேன் என்று சொல்லுகிறார். பிறகு கல்யாணத்திடம் ஒழுங்கா உண்மைய சொல்லு என்று சொல்ல கல்யாணம் மூச்சு விடாமல் நடந்த விஷயங்களை சொல்ல சுந்தரவல்லி கோபமாகி பாதி சாப்பாட்டில் இருந்து கை கழுவி விடுகிறார். உடனே டென்ஷன் ஆகி இந்த வீட்டுக்குள்ள கிச்சன்ல போய் சமைக்கிறதுக்கு அவை யாரு என்று கோபமாகி அவ சமைச்சது சாப்பிடணும்னு நினைக்கும் போது எனக்கு குமட்டிக்கிட்டு வருது ஒன்று சொல்ல சூர்யா வெறுப்பேற்றுகிறார்.
உடனே நந்தினி பார்த்த சூர்யா நான் உன்ன கவனிக்கவே இல்ல இவ்வளவு டேஸ்ட்டா செஞ்சுட்டு எதுக்கு ஓரமா ஒதுங்கி நிக்கிற இங்க வா என்று கூப்பிட நந்தினி முதலில் வர மறுக்க மாமாக்கு சாப்பாடு எடுத்து வை என்று கூப்பிடுகிறார். பிறகு சூர்யாவிற்கு நந்தினி பரிமாறுகிறார். நந்தினி சூர்யாவிடம் நீ சாப்டியா என்று கேட்க இல்ல சார் நான் அப்புறம் சாப்பிடுகிறேன் என்று சொன்ன சூர்யா சாப்பாடு எடுத்து வந்து ஊட்டி விட, மாமா சொன்னா சாப்பிடணும் என்று சொல்ல, உங்களுக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா இன்னும் ஒக்காந்துகிட்டு இருக்கீங்க எழுந்திருங்கள் என்று சொல்ல அசோகன் மாதிரி சுரேகா மூவரும் எழுந்து கொள்கின்றனர். சூர்யா இந்த டிஸ்டர்பன்ஸ் எல்லாம் நீ கண்டுக்காத நந்தினி நீ சாப்பிடு என்று ஊட்டி விட நந்தினி சாப்பிடாமல் மறுத்து விடுகிறார். உடனே மாதவியும் சுரேகாவும் அம்மா ரொம்ப பசிக்குதுமா என்று சொல்ல சரி இப்ப என்ன பசிக்குது தானே ஒரு அரை மணி நேரம் இருங்க நான் சமைச்சு தரேன் என்று சொல்ல அருணாச்சலம் எனது நீ சமைக்கிறியா என்று சொல்ல ஆமாம் என்று திரும்பிச் செல்கிறார் உடனே கிச்சன் இந்த பக்கம் இருக்கு என்று சொல்ல நாங்கதான் போய்கிட்டு இருக்கேன் என்று சொல்லி வேகமாக கிச்சனுக்கு செல்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.
இன்றைய ப்ரோமோவில் என் பொண்டாட்டி சமைச்ச இந்த சாப்பாட்டுக்கு நான் பைவ் ஸ்டார் கொடுப்பேன் ஆனா அந்த சாப்பாட்டுக்கு ஜீரோ என்று சுந்தரவல்லி சமையலை சொல்லுகிறார். சுந்தரவல்லி மாதவியிடம் என் கிச்சனுக்குள்ள அவள விட்டுட்டு அவ சமைக்கிறத நான் சாப்பிடணும்னு சொல்றியா என்று சொல்லுகிறார்.
நந்தினி மாதவியிடம் நான் சமைச்சா தான் அம்மா சாப்பிட மாட்டாங்களே என்று சொல்ல இனிமே சாப்பிடுவாங்க சமைத்துவிடு என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.