மூக்குத்தி அம்மனாக நடிக்கும் நயன்தாரா; லாபத்தில் ஒரு பங்கு கேட்கிறார்?

விரதம் இருந்து நடிக்கும் நயன்தாராவின் நோக்கம் பற்றிப் பார்ப்போம்..

சுந்தர்.சி இயக்கத்தில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்கின்றார் நயன்தாரா. முன்னதாக, ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நயன்தாராவின் நடித்த இப்படம் நேரடியாக ஓடிடி.யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதன் காரணமாக இப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகின்றது. ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக சுந்தர்.சி மூக்குத்தி அம்மன்2 படத்தை இயக்கி வருகின்றார்.

இந்நிலையில், நயன்தாராவின் சம்பளம் பற்றிய தகவல் கிடைத்திருக்கின்றது. அதன்படி, நயன்தாரா சம்பளமாக லாபத்தில் ஒரு பங்கை கேட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

ஒருவேளை மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் நயன்தாராவின் சம்பளம் பலமடங்கு உயரும் என்றும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

நயன்தாரா விரதமெல்லாம் இருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார் என கூறப்படுகிறது. எப்படியோ, அம்மன் அருள் புரிந்தால் லாபம்தான்.!

mookuthi amman 2 movie nayanthara images 1200