‘பராசக்தி’ படத்தில் மலையாள நடிகரை தொடர்ந்து, ஹிந்தி நடிகரும் இணைவாரா?
பிரபல மலையாள நடிகர் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்..
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ பட டைட்டில் டீசர் எழுச்சியாக முழங்கியது. ‘அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற பாடலுடன் துவங்கி, மாணவர்களின் போராட்டத்துடன் முடிவதைபோல் டீசர் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ரவிமோகன் வில்லனாகவும் மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா நடிக்கின்றனர். இது தொடர்பாக லீக் ஆன வீடியோவில் ரவிமோகனின் மிரட்டலான நடிப்பு வைரலானது.
இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் பாசில் ஜோசப் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனராகவும் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது ‘பராசக்தி’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்ட வரலாற்றை கூறும் விதமாக இந்தப் படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. ‘பராசக்தி’ ஷுட்டிங் தற்போது இலங்கையில் மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், அப்படியே ஹிந்தி சினிமாவில் இருந்தும் பிரபல நடிகரை படத்தில் இணைத்தால் வியாபாரம் மேலும் விரிவடையும்’ என்ற இணையவாசிகள் கருத்து வைரலாகி வருகிறது.