முழுக்க முழுக்க காமெடி வெப் சீரிஸ் ‘செருப்புகள் ஜாக்கிரதை’ ரிலீஸ்
காமெடியை மையப்படுத்தி உருவாகியுள்ள வெப் சீரிஸ் பற்றிப் பார்ப்போம்..
வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்யேக படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது காமெடி சீரிஸான ‘செருப்புகள் ஜாக்கிரதை’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். ரெய்டு அதிகாரிகளுக்கு பயந்து, அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் (சிங்கம்புலி) கொடுக்கிறார். தியாகராஜனும் அவரது மகன் இளங்கோவும் செருப்பை தொலைத்து விடுகிறார்கள்.
வைரம் உள்ள செருப்பைத் தேடி அலையும், கலகலப்பான பயணம் தான் இந்த சீரிஸ். ஒவ்வொரு எபிஸோடும் கலக்கலான காமெடியுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலியும் மற்றும் விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் வரும் மார்ச் 28 முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.