ரஜினியை தொடர்ந்து, அஜித்துடன் இணைகிறார் மோகன்லால்
‘தல’ அஜித்தின் அடுத்த பட அப்டேட்ஸ் பார்ப்போம்..
அஜித்துடன் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார் அஜித். ஆனால், அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது.
முதலில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில், அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
ஆனால், மோகன்லால் இன்னும் நடிப்பது உறுதி செய்யப்படவில்லை. விரைவில் படப்பிடிப்பு தேதி முடிவானவுடன், மோகன்லால் இணைவார் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஷுட் நவம்பரில் தொடங்கும் எனவும், அதற்குள் கார் ரேஸ் பணிகளை முடித்து அஜித் திரும்புவார் எனவும் தகவல்கள் வருகிறது.
‘கூலி’ படம் முடிந்து ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் மீண்டும் மோகன்லால் நடிக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில், ஆதிக் இயக்கும் ‘தல’ அஜித் படத்திலும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.