மனோஜிடம் ரோகினி கேட்ட கேள்வி, குற்ற உணர்ச்சியில் மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜிடம் ரோகினி கேள்வி கேட்க மறுப்பக்கம் மீனா குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரூமில் ரோகிணி உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் எப்படியாவது அந்த பணத்தை வாங்கி அம்மா கிட்ட கொடுத்தது திருட்டு நகை வாங்கி கொடுத்ததனால அம்மாவுக்கு ரொம்ப இன்சல்ட் ஆயிடுச்சு என்று சொல்ல அம்மாவுக்கு மட்டும் தான் அப்படி ஆச்சா அவங்க என்ன திட்டும் போது அடிக்கும்போது நீ எதுவுமே கேட்க மாட்டேங்கிற என்று சொல்ல மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். நீ முதல்ல நகை கொடுத்தவன் கிட்ட இருந்து பணத்தை வாங்கிட்டு வா வேணும்னா முத்துவை கூட்டிட்டு போ என்று சொல்ல அவனை எதுக்கு கூட்டிட்டு போகணும் என்று கேட்கிறார்.
நீ திருடன் கிட்ட பணம் வாங்கி இருக்க அவன் தான் சரியான ஆள் என்று சொல்ல அப்ப நீ வரமாட்டியா என்று கேட்க அங்கே ஏதாவது பிரச்சனை ஆயிட்டா நான் என்ன பண்றது என்று சொல்லுகிறார் உடனே இதே மீனா பிரச்சினையில் மாட்டி இருந்தா உடனே முத்து வந்துருப்பாரு என்று சொல்ல அதுக்குதான் அவனை கூட்டிட்டு போன்னு சொல்றேனே என சொல்ல கோபமாக சென்று உட்கார்ந்து விடுகிறார். மறுபக்கம் சீதா தூங்கிக் கொண்டிருக்க கண் விழித்து சந்திராவை பார்த்துக்கொண்டு இருக்கிறார் பிறகு அவர் அப்பாவை போட்டோ முன் நின்று நான் இதுவரைக்கும் அம்மாகிட்ட பொய் சொன்னது கிடையாது ஆனா எனக்கு இது தவிர வேற வழி தெரியல பா என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து மீனாவிற்கு ஃபோன் போடுகிறார்.
மீனாவும் தூங்காமல் இருக்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு அக்கா ரொம்ப பெரிய விஷயம் பண்றேன்னு தோணுது அம்மா கிட்ட சொல்லாம செய்யறது கஷ்டமா இருக்கு என்று சொல்ல அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க கண்டிப்பா மாமா கிட்ட சொல்லிடுவாங்க அவரு கல்யாணத்தை நடத்த விட மாட்டாரு உனக்கு ஒரு நாள் கண்டிப்பா ஊரறிய அவர் கல்யாணம் பண்ணி வைப்பாருன்னு நான் நம்புறேன் கண்டிப்பா அவரு புரிஞ்சு பாரு நீ போய் படு என்று சொல்லி ஃபோனை வைக்க மீனா தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் முத்து வருகிறார்.
சாப்பிடவாங்க என்று சொல்ல,இல்ல மீனா நான் சாப்பிட்டேன் எனக்கு சுடு தண்ணி மட்டும் கொடு என்று சொல்ல மீனா கொடுக்கிறார். எனக்கு நாளைக்கு காலைல கொஞ்சம் வேலை இருக்கு நான் படுக்கிறேன் என்று முத்து சொல்லி படுத்து விட மீனா உட்கார்ந்து கொண்டு உங்கள் மீறி நான் எந்த முடிவு எடுத்தது இல்ல ஆனா சீதா வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களால சந்தோஷமா இருக்க முடியாது அதனால தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போறேன் என்ன மன்னிச்சிடுங்க என்று மனதில் நினைக்கிறார். மறுநாள் காலையில் சீதா வழக்கம்போல் வேலைக்கு கிளம்புவது போல ரெடியாக அருண் போன் பண்ணி சீக்கிரம் வர சொல்லுகிறார். இதோ வந்த ட்ரெயின் என சீதா சந்திராவிடம் சொல்லிவிட்டு கிளம்ப அவர் சீதாவிற்கு டிபன் கொடுக்க வேண்டாம் என்ன சொல்ல ஊட்டி விடுகிறார். நீ இன்னைக்கு வேலைக்கு போகாமல் இருந்திருக்கலாம் நம்ம வீட்ல வேற எல்லாருக்கும் சாப்பாடு ரெடி பண்ணி மாப்பிள்ளை போட போறதா சொல்லி இருக்காரு சத்யாவுக்கே இவ்வளவு செய்யும்போது உனக்கு எவ்வளவு செய்வார் என்று சொல்ல சீதாவிற்கு பொரை ஏற கண்கலங்குகிறது. உடனே போதுமா சொல்லிவிட்டு அவரது அப்பாவிடம் நின்று சாமி கும்பிட்டு விட்டு வேகமாக கிளம்பி விடுகிறார்.
மீனா பூஜை ரூமில் மாலையை எடுத்துக்கொண்டு கடவுளிடம் வேண்டி விட்டேன் வெளியில் வர முத்து எதிரில் வருகிறார் சூப்பரா இருக்கு மீனா மாலை இதே மாதிரி தான் சீதா கல்யாணத்துக்கும் மாலை கட்ட வேண்டும் என்று சொல்லுகிறார். மீனா குற்ற உணர்ச்சியில் நிற்க சரி நீ போயிட்டு வா என்று சொல்லுகிறார்.ஆனால் கையில் போன் பர்ஸ் எதுவும் இல்லாததால் என்ன நீ என்ன நினைப்புல இருக்க உன் பர்ஸ் எல்லாம் எங்க என்று சொல்லி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். பிறகு மீனாவை அனுப்பி வைத்த உடன் முருகன் போன் போட்டு கூப்பிட நான் வந்துட்டேன் என சொல்லி போனை வைக்கிறார். அருண், சீதாவும் ரிஜிஸ்டர் ஆபீஸ் காத்துக்கொண்டிருக்க மீனா வருகிறார். பிறகு என்ன நடக்கிறது? அருண் சீதா கல்யாணம் நடந்ததா? முத்து என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
