MK Stalin says
MK Stalin says

MK Stalin says – சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில், திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மக்களவை தேர்தலுடன் இணைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி குறித்து பேசிய ஸ்டாலின், ‘பாதுகாப்பு ஆவணங்களையே பாதுக்காக்க முடியாத மோடிதான் இந்த நாட்டை பாதுக்காக்க போகிறாரா? ‘ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில், அடிக்கடி தமிழகம் வரும் மோடி, தேர்தலுக்காக ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார் என்று கூறினார்.,

அதை தொடர்ந்து, தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் இன்னும் குழு அமைக்கவில்லை, இரவுக்குள் அமைக்கப்படும் என்று கூறிய ஸ்டாலின், நாளை காலை அவர்கள் திமுக நிர்வாகிகளை சந்திப்பார்கள்.

மேலும் படிப்படியாக மற்ற கட்சிகளுடன் பேசி இரண்டொரு நாட்களில் தொகுதிகள் அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், “பரபரப்பை ஏற்படுத்துவதற்காக கேட்கும் கேள்விகளுக்கு, நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

தேமுதிக விவகாரம் பற்றி பொருளாளர் துரைமுருகன் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டதால், அதுபற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here