meera
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் ஒரு பப்பில் தனது ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 17-வது போட்டியாளராக உள்ளே சென்று பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர் மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்பும் பலரிடம் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார்.

இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயன், மூடர்கூடம் நவீன் உள்ளிட்ட பலரையும் வம்புக்கு இழுத்தார்.

வீடியோ ஒன்றை வெளியிட்டு சேரன் தவறு செய்து விட்டு அதை அப்படியே மாற்றி விட்டார்.

எனக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு ஆண் கூட ஆதரவு கொடுக்கவில்லை. சேரனும் இரண்டு பெண்ணை பெற்றவர், என் பெயர் கெட்டு விடும் என்றெல்லாம் கூறி நாடகமாடி விட்டார்.

இரண்டு பெண்களை பெற்ற கமல்ஹாசனும் எனக்கு நீதி வழங்கவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், மும்பையில் ஒரு பப்பில் தனது ஆண் நண்பருடன் நடனமாடும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.