மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் எப்போது? என தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு தின ஸ்பெஷலாக வெளியாகி இருந்த நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 16-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகும் என கூறப்படுகிறது.