Master Collection Report in Tamilnadu

மாஸ்டர் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானாலும் தொடர்ந்து திரையரங்குகளிலும் மாஸ் காட்டி வருகிறது.

Master Collection Report in Tamilnadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார்.

மேலும் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவுடன் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவிலும் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

இருப்பினும் திரையரங்குகளில் தொடர்ந்து மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் செம மாஸ் காட்டி வருகிறது.

இதுநாள் வரை தமிழகத்தில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் ரூபாய் 125 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.