குக் வித் கோமாளி மணிமேகலை தம்பியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இந்த தொலைக்காட்சியில் பணியாற்றியதை தொடர்ந்து உசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தனது குடும்பத்தார் எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் கணவருடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மணிமேகலை தற்போது தனது சொந்த ஊருக்குச் சென்று அங்கு அடிக்கடி வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய கணவர் உசைன் மற்றும் தம்பி குணா என இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக இவர் தான் மணிமேகலையின் தம்பியா என பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CpxYuy_vU-7/?igshid=YmMyMTA2M2Y=