Malavika About Video Call With Vijay
Malavika About Video Call With Vijay

வீடியோ காலில் விஜயுடன் பேசியது என்ன என்பது குறித்து மாஸ்டர் மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

Malavika About Video Call With Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.

விஜய் திறமையான நடிகர் ஆனால் அஜித் தான் சூப்பர் ஸ்டார் – ஓபனாக கூறிய பிரபல நடிகை!

இதனை அடுத்து விஜய் தற்போது மாநகரம் கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கம் மற்றும் ரத்னகுமார் திரைக்கதையில் அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் விஜய்யின் உறவினரான பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருந்தது ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக சிறுமி காணாமல் போய்விட்டது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே மாஸ்டர் பட குழுவினர் ஒன்றிணைந்து வீடியோ காலில் பேசியிருந்தனர்.

அந்த புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் இந்த வீடியோ காலில் இந்நேரம் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.

அப்படி ரிலீஸ் ஆகி இருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் எப்படி இருந்திருக்கும் என விவாதித்தோம். அது மிகவும் ஜாலியான மறக்க முடியாத ஒரு சேட் என கூறியுள்ளார்.

தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இது தானா? இதோ அசத்தல் அப்டேட்!

இந்த மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடித்து உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சாந்தனு, மகேந்திரன், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, ரம்யா என இன்னும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.