மகான் படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Mahaan Movie Trailer : Prime மெம்பர்கள் இப்படத்தை பிப்ரவரி 10 முதல் Prime Video-இல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காணலாம். கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். ‘சீயான்’ விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘மகான்’ -தமிழ் ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தின் டிரெய்லரை Prime Video இன்று வெளியிட்டது, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையிடப்படவுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆக்ஷன் திரில்லரில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகிய பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Mahaan Official Tamil Trailer
Mahaan Official Tamil Trailer

நேர்மையான, கொள்கை பிடிப்பு கொண்ட வாழ்க்கையிலிருந்து விலகியதால், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட ஓர் எளிய மனிதனின் கதையில் இந்த டிரெய்லர் நம்மை அழைத்துச் செல்கிறது. அவர் தனது லட்சியங்களை எட்ட தனித்து முன்னேறுகிறார். அதில் அவர் வெற்றியின் உச்சத்தை அடைந்தாலும், அவர் தனது மகன் தன்னுடன் இல்லாத இழப்பை உணர்ந்து, அவரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள், மாற்றங்கள், ஏற்ற தாழ்வுகளை இப்படம் சித்தரிக்கிறது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.