Maayanadhi Sneak Peek Video
மாயநதி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் வரும் ஜனவரி 31-ம் தேதி திரைக்கு வர உள்ள படங்களில் ஒன்று மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ள இந்த படத்தில் அபி சரவணன், வெண்பா, அப்புக்குட்டி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அழகிய காதல் கதையை பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது, தற்போது இப்படத்தில் இருந்து ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

படிக்காத ஆட்டோ ட்ரைவரை காதலிக்கும் பெண்ணுக்கு பட்டத்தை வைத்து அறிவுரை கூறுகிறார் நரேன். இந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி சமூகத்திற்கு தேவையான படம் இது என்ற கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.