தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது ‘லக்கி பாஸ்கர்’ படம்: எப்படி தெரியுமா?
தியேட்டர் ரெஸ்பான்ஸ் வேறு, ஓடிடி ரெஸ்பான்ஸ் வேறு. இவ்வகையில் ‘லக்கி பாஸ்கர்’ படத்திற்கு கிடைத்த “லக்” பற்றிப் பார்ப்போம்..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய ‘அமரன்’ திரைப்படம் ரிலீஸான நாளில் வெங்கி அட்லூரி இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ படமும் ரிலீஸானது. ஆனால், ‘அமரன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு ‘லக்கி பாஸ்கர்’ அமையவில்லை.
இந்நிலையில் இப்படம் ஓடிடி.யில் வெளியாகி தென்னிந்திய சினிமாவில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.
‘லக்கி பாஸ்கர்’ படம் பண மோசடியை பற்றிய விவரிக்கிற ஒரு பீரியட் கிரைம் டிராமா ஆகும். அதாவது, ஒரு சாதாரண வங்கி ஊழியராக இருக்கும் துல்கர் சல்மான், எப்படி கோடீஸ்வரராக உருவாகிறார் என பல திருப்பங்களுடன் சொல்லப்பட்டு் உள்ளது.
தமிழ் சினிமாவில், ‘வங்கி பற்றிய புரிதல்’ வெகுஜன மக்களுக்கு கனெக்ட் ஆகாததால் இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என திரை ஆர்வலர்களால் கூறப்படுகிறது.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் பார்வைகளை பொறுத்த மட்டில் கேரளா உட்பட அனைத்து மாநிலங்களிலும் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுகளிலும் கவர்ந்துள்ளது.
தற்போது 13 வாரமாக தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் முதல் தென்னிந்திய திரைப்படம் என்கிற சாதனையை இப்படம் படைத்துள்ளது. இந்த சாதனையை துல்கர் சல்மான் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
