கேம் பாலிட்டிக்ஸ்: ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படம் ரிலீஸ்?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு போட்டியாக ‘பராசக்தி’ படத்தை களத்தில் விட திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசியல் விளையாட்டு பார்ப்போம்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் மதராஸி, தீபாவளிக்கு எஸ்கே24-வது படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ‘பராசக்தி’ என ரிலீஸாக திட்டமிடப்பட்டு உள்ளது.

இச்சூழலில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜன நாயகன்’ படமும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் ஆனாலும், அந்த படத்திற்கு எதிராக ‘பராசக்தி’ படத்தை ரிலீஸ் செய்ய ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பு நிறுவனம். மேலும், டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களை, ரெட் ஜெயிண்ட் நிறுவனம்தான் ரிலீஸ் செய்து வருகிறது.

ஆதலால், ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகும்போது, ‘பராசக்தி’ படத்தை தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க சினிமா உள்பட அனைத்திலும் பாலிடிக்ஸ் கேம் பரபரக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான ‘பராசக்தி’ படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

parasakthi and jananayagan movies release politics