Lokesh Kanagaraj Upcoming Hero

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ராம்சரண் அல்லது பிரபாஸை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது செம தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Lokesh Kanagaraj Upcoming Hero : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இரண்டு படமும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவதாக தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்தப்படமும் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த நிலையில் ராம் சரண் அல்லது பிரபாஸை வைத்து படத்தை இயக்குவார் என கூறப்பட்டு வந்தது. மேலும் மைத்ரேயி மூவிஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ்க்கு அட்வான்ஸ் தொகையை கொடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ராம் சரணும் இல்லை பிரபாஸூம் இல்லை - லோகேஷ் கனகராஜின் ஹீரோ இவர் தானா?? செம்ம கூட்டணி.!!

இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை இயக்க இருப்பதாகவும் ஆனால் அவர் வேறொரு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மைத்ரேயி மூவிஸ் நிறுவனம் அனுமதி அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராம் சரணும் இல்லை பிரபாஸூம் இல்லை - லோகேஷ் கனகராஜின் ஹீரோ இவர் தானா?? செம்ம கூட்டணி.!!