கூலி படம் எப்படி இருக்கு.. லோகேஷ் கொடுத்த அப்டேட், எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Web Ads

கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

lokesh kanagaraj review for coolie movie
lokesh kanagaraj review for coolie movie

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா ,ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ,உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படத்தை பாராட்டி இருந்த நிலையில் தற்போது படம் எப்படி வந்திருக்கிறது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.

கூலி படத்தில் முதல் பாதி எமோஷனல் டிராமாவாக இருக்கும்.பிறகு இடைவெளி காட்சியில் ரஜினியின் ட்ரான்ஸ்பர்மேஷன் நடக்கும் பிறகு முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் ரஜினி சார் படத்தை பார்த்துவிட்டு எனக்கு இன்னொரு “தளபதி” கொடுத்திருக்கீங்க லோகேஷ் என்று பாராட்டியதாக சொல்லியுள்ளார்.

இவரின் இந்த பேச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.

lokesh kanagaraj review for coolie movie
lokesh kanagaraj review for coolie movie