லெட்ஸ் கேட் மேரிட் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக தமிழில் “லெட்ஸ் கெட் மேரிட் (LGM)” என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருக்கிறார். இதில் கதாநாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகி இவானா நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர் .

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசரையும் வெளியிட்டு படம் மீது உள்ள எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறது.