Legend Saravana Meet With Rajinikanth

அண்ணாத்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார் லெஜன்ட் சரவணன்.

Legend Saravana Meet With Rajinikanth : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இதே இடத்தில் தான் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை ஜேடி ஜெர்ரி இயக்கி வருகின்றனர்.

அண்ணாத்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்த லெஜன்ட் சரவணன் - வைரலாகும் புகைப்படம்.!!

2 படத்தின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடப்பதால் லெஜன்ட் சரவணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்ணாத்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்த லெஜன்ட் சரவணன் - வைரலாகும் புகைப்படம்.!!