மாலையுடன் கால்கடுக்க காத்துக் கொண்டிருந்த ரசிகருக்காக விஜய் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் விஜய் 64 திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடைபெற்று வருகின்றன.
மேலும் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தினம் தினம் வீடியோக்களும் புகைப்படங்களும் லீக்காகி வைரலாகி கொண்டு தான் இருக்கின்றன.
தற்போதும் அப்படி தான் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் கையில் மாலையுடன் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறார்.
ஹோட்டலில் இருந்து வெளியே வந்ததும் இதனை பார்த்த விஜய் நேராக அந்த ரசிகனின் அருகே சென்று மாலையை கழுத்தில் வாங்கி கொண்டு ரசிகனை தட்டி கொடுத்து விட்டு வருகிறார்.
Today’s Exclusive Video of #Thalapathy #Vijay ???????? @Thalapathy64Off #Thalapathy64 pic.twitter.com/9uqr1IsvCR
— #Thalapathy64 (@Thalapathy64Off) December 18, 2019