சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு வடிவேலுவின் கன்னத்தில் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் குத்தியது போல் வீடியோ பதிவினை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இயக்குனர் பி.வாசு அவர்களின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் 2005-ஆம் ஆண்டில் வெளியான மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் “சந்திரமுகி”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் பூஜையுடன் இப்படத்திற்கான படப்பிடிப்புகளையும் படக்குழு மைசூரில் தொடங்கியுள்ளது.

நடிகர் வடிவேலுவின் கன்னத்தில் ஓங்கி குத்திய ராதிகா சரத்குமார் - அவரே வெளியிட்ட வீடியோ பதிவு.!

இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு காமெடியான வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் வடிவேலுவின் கன்னத்தில் ஓங்கி குத்திய ராதிகா சரத்குமார் - அவரே வெளியிட்ட வீடியோ பதிவு.!

அதாவது படப்பிடிப்பு முடிந்த பிறகு ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் அமர்ந்திருந்தனர் அப்பொழுது நடுவில் அமர்ந்திருந்த வடிவேலுவின் கன்னத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் குத்துவது போல் அந்த வீடியோ பதிவாகியுள்ளது.

நடிகர் வடிவேலுவின் கன்னத்தில் ஓங்கி குத்திய ராதிகா சரத்குமார் - அவரே வெளியிட்ட வீடியோ பதிவு.!

அதில் லாரன்ஸ் வடிவேலுவின் கன்னத்தில் மெதுவாக குத்தினார் ஆனால் ராதிகா சரத்குமார் சற்று பலமாக அடித்துள்ளதாக லாரன்ஸ் கூறுகிறார் இந்த காமெடியான வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் வடிவேலுவின் ரியாக்சன்சை ரசித்த ரசிகர்கள் எங்கள் தலைவனின் எக்ஸ்பிரஷன் தான் அல்டிமேட் ஆக இருக்கிறது என்று கருத்தோடு இதனை வைரலாக்கி வருகின்றனர்.