விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் பிரபல இளம் நடிகர்.

Latest Updates of Chiyaan60 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தன்னுடைய மகனுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் சியான் 60. இந்த படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்க லலித்குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படம் பற்றிய தகவலை வெளியிட்ட பிரபல இளம் நடிகர்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இளம் நடிகரான ராகவன் முருகன். இவர் ரெக்க, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நான் கார்த்திக் சுப்புராஜின் தீவிர ரசிகன். தற்போது சியான் 60 படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.

ஆடி அமாவாசை : முன்னோரை வழிபட, தேடி வரும் நன்மைகள்..

என்னுடைய காட்சிகள் காஞ்சிபுரத்தில் படமாக்கப்பட்டன. நான் என்னுடைய காட்சிகளை நடித்து முடித்து விட்டேன் என கூறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த தகவல் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது

Corona-வால் தாமதமாகும் Bigg Boss Season 5 – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Kamal Haasan