Bigil Scenes Secrets
பிகில் படத்தின் கடைசி 7 நிமிட காட்சிகள் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி சரவெடியாக வெடிக்க உள்ளது.

அட்லீ இயக்க ரஹ்மான் இசையமைக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ள இந்த படத்திற்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் எனவும் தெரிய வந்திருந்தது, தற்போது இதில் கடைசி 7 நிமிட காட்சி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தானாம், இந்த கடைசி 7 நிமிடங்கள் படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற இடங்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில கலாட்டாக்கள் இடம் பெரும் என கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் பிகில் திரைப்படம் அக்டோபர் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இதே நாளில் தான் கார்த்தியின் கைதி திரைப்படமும் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.