லால் சலாம் படத்தின் கெட்டபில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து செல்லும் நடிகர் ரஜினிகாந்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக திகழும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தின் பாயாக சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார்.

அதனை சிறப்பு போஸ்டருடன் வெளியிட்டு படக்குழு உறுதி செய்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் உள்ள ரோடியர் மில்லில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மொய்தின் பாய் கெட்டபில் நடந்து செல்லும் நடிகர் ரஜினியின் வீடியோ இணையத்தில் லீக்காகி ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பாண்டிச்சேரியில் உள்ள பல்வேறு இடங்களில் வரும் ஜூன் 17ஆம் தேதி வரை நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் இதில் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் 10 நாட்களுக்கு நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.