நடிகை குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில் உடல் எடை குறைத்த பின் விதவிதமாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மாபெரும் முன்னணி ஹீரோயினியாக நடித்து வந்தவர் குஷ்பூ. கமல், ரஜினி, பிரபு, சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான இவருக்கு கோயில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர்.

தற்பொழுது மீண்டும் உடல் எடை குறைத்த பின் ஒரு சில படங்களில் நடித்து வரும் குஷ்பு அவ்வப்பொழுது தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சி செய்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்பொழுது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது குஷ்பூவா அல்லது அவரது மகளா என்று பாராட்டி புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.