Bigg Boss Kavin About His Retirement : தமிழ் சின்னத்திரையின் தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் கவின். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.
நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூபாய் 5 கோடியை பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இது ரசிகர்களுக்கும் பெரும் ஷாக் கொடுத்தது. தற்போது இவர் லிப்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார்.
தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்புடைய ஓய்வை அறிவித்துள்ளார். இது சினிமாவைப் பற்றிய தொலைக்காட்சி பற்றிய ஒய்வு அல்ல.
பப்ஜி உள்ளிட்ட கேமில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இவருடைய இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.