அஜித்தின் ‘AK65’ படத்தை தயாரித்து இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ்?

‘தல’ அஜித்தின் AK65 திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். மேலும், இப்படத்தை அவர் தயாரிக்கவும் உள்ளதாக சொல்லப்படுகின்றது.
கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தொடர்ந்து, பல படங்களை தயாரித்தும் வருகின்றார். அந்த நிறுவனத்தில், அஜித் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. பொதுவாக, கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே மாஸான ஆக்சன் ஜானர் படமாகவும், வித்தியாமான படமாகவும் இருக்கும்.
சமீபத்தில், சூர்யா நடிப்பில் அவரது இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படத்தை ஒரு ஆக்சன் கலந்த காதல் படமாக உருவாக்கியிருந்தார் கார்த்திக் சுப்பராஜ். அதைத்தொடர்ந்து அவர் அஜித்தை வைத்து இயக்கப் போவதாக சொல்லப்படும் படம் ஒரு பக்காவான மாஸ் கமர்ஷியல் படம் என கூறப்படுகின்றது.
‘குட் பேட் அக்லி’ படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வித்தியாசமாக காட்டியிருந்தார். அவ்வகையில் கார்த்திக் சுப்பராஜும் AK65 படத்தில் அஜித்தை வேற லெவலில் காண்பிப்பார் என தெரிகின்றது.
அஜித், தனது அடுத்த படமான AK64 படம் துவங்குவதற்கு முன்பே AK65 படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை புக் செய்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது. அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் AK64 படத்தை துவங்கி, அடுத்தாண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
