மாரி செல்வராஜின் ‘பைசன்’ படம் ரிலீசுக்கு முன்பே, செம கலெக்ஷன்..

‘வாழை’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘பைசன் காளமாடன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. படத்தில் கபடி வீரனாக நடித்துள்ளார் துருவ் விக்ரம். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக பா.இரஞ்சித் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் 2-வது படம் இதுவாகும். முன்னதாக ‘பரியேறும் பெருமாள்’ படம் வெளியானது.
இந்நிலையில், பைசன் காளமாடன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் 15 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 18 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஓவர்சீஸ் உரிமம் 2 கோடி, தொலைக்காட்சி உரிமம் 5 கோடி என ரிலீசுக்கு முன்பே 40 கோடி வசூலித்துள்ளது. இதுதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் உரிமமும் இனி விற்கப்பட இருக்கிறது. இதுபோக தியேட்டர் மூலம் கிடைக்கும் வசூல் என அனைத்தையும் கணக்கிட்டால் ‘பைசன்’ படம் 100 கோடிக்கு மேல் விற்பனையாகும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
