ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல்: லோகேஷ் ஆர்வம்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் கமலின் பங்களிப்பு இருக்கவேண்டும் என லோகேஷ் கனகராஜ் விரும்புகிறார். படப்பிடிப்பு முடிவடைந்தாலும், படத்தில் கமலின் ‘வாய்ஸ் ஓவர்’ இருந்தால் நன்றாக இருக்குமே என லோகேஷ் எண்ணுகிறார். இதனை ரஜினியுடன் சொல்லி அவருக்கு ஓகே என்றால், கமலிடம் சென்று, லோகேஷ் பேசலாம் என தகவல் வந்துள்ளது. ரஜினியும் கமலும் இதற்கு ஓகே சொன்னால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும்.

Web Ad 2

முன்னதாக, கமல்ஹாசன் விஜய்யின் ‘லியோ’ படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தார். ஆனால், அந்த படம் lcu படமாக இருந்தது. இருப்பினும் ‘கூலி’ திரைப்படம் lcu வாக இல்லை என்றாலும், கமலை வைத்து வாய்ஸ் ஓவர் கொடுக்கலாம். தற்போது, இது வெறும் பேச்சுவார்த்தை அளவில் தான் இருப்பதாகவும், இனி தான் ரஜினி -கமல் இருவரிடமும் பேசிவிட்டு, கமலின் கால்ஷீட் எப்படி என்பதை பார்த்து அடுத்தடுத்த விஷயங்களைப் பற்றி முடிவெடுப்பார்கள் என தெரிகின்றது.

இதுவரை இப்படத்தை பற்றி வெளியாகும் தகவல்களை வைத்தும், படத்திலிருந்து ரிலீசான போஸ்டர்ஸ், பாடல்களை வைத்தும் பார்க்கையில் கண்டிப்பாக ‘கூலி’ படம் 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

lokesh kanagaraj plan to include kamalhaasan in coolie movie
lokesh kanagaraj plan to include kamalhaasan in coolie movie