காதல் கதைக்களத்தில் சூர்யா நடிக்கும் கடைசி திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், காதலை மையமாக கொண்டு உருவாகி வரும் சூர்யா-44 படம் குறித்து பார்ப்போம்..
சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவான கங்குவா படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு அமையாத நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ‘சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
இந்தப் படத்தை அவரும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக இணைந்து தயாரித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அந்தமான் உள்ளிட்ட இடங்களில் சூட்டிங் நடந்து முடிந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ன்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன.
படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி திட்டமிடப்பட்டுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கேங்ஸ்டர் கதைக்களங்களில் படங்களை கொடுத்துவரும் கார்த்திக் சுப்புராஜ், இந்தப் படத்தில் காதலை மையமாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
அண்மையில்.. ‘இனி ரொமான்ஸ் மற்றும் காதலைப் பேசும் கதைகளை தவிர்த்து, ஆக்ஷன் படங்களில் மட்டும் தான் நடிப்பேன்’ என சூர்யா பேசியது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், இப்படம் சூர்யாவுக்கு கடைசிக் காதல் படமோ.. என்னமோ.!