Viswasam-Record
வருட இறுதியிலும் தல அஜித் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இம்மான் இசையமைத்திருந்தார். பல திரையுலக பிரபலங்கள் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன, குறிப்பாக கண்ணான கண்ணே பாடலை கேட்டு கண் கலங்காத அப்பாக்களும் பெண்களும் இல்லை என்றே கூறலாம்.

ஒட்டு மொத்த ரசிகர்களின் உணர்வுகளையும் வருடிய இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ யூ ட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2019-ஐ தமிழ் சினிமாவிற்கு வெற்றிகரமான ஆண்டாக உருவாக்கியதும் அஜித் தான், சாதனை படைத்த வருடமாக முடித்து வைப்பதும் எங்க தல தான் என அஜித் ரசிகர்கள் ஆரவாரத்தில் இறங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.