Pushpa 2

‘கங்குவா’ படத்திற்கான முன்பதிவு நிறுத்தி வைப்பு; இதென்ன புது பிரச்சினை..

திரையரங்குகளில் ‘கங்குவா’ படத்திற்கான முன் பதிவு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்..

சிறுத்தை சிவா இயக்கத்தில், கங்குவா திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் கங்குவா என்பது கடந்த காலத்தில் வரும் சூர்யாவின் பெயர். அதேபோல் பிரான்சிஸ் என்பது நிகழ்காலத்தில் வரும் சூர்யாவின் பெயர்.

இதில் பிரான்சிஸ் கேரக்டர் படத்தில் வெறும் அரை மணி நேரம் தான் வருமாம். எஞ்சியுள்ள 2 மணிநேரமும் வரலாற்று காட்சிகள் மட்டுமே இடம்பெற்று இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
அதேபோல் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் சூர்யா புரமோஷனில் முழுவீச்சாக ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும்
இடைவிடாது புரமோஷன் செய்து வருகிறார் சூர்யா.

ரிலீசுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கங்குவா திரைப்படம் தற்போது புது சிக்கலில் சிக்கி இருக்கிறது. அதன்படி 75 – 25 என்கிற ஷேர் டீலிங்கிற்கு பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிக்காததால், அவர்கள் தங்கள் திரையரங்குகளில் கங்குவா பட முன்பதிவையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த பிரச்சனை புதன்கிழமை வரை நீடிக்கும் என கூறப்படுவதால், அது படத்தின் வசூலையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருவதால், அதிகளவிலான தியேட்டர்கள் கங்குவா படத்திற்கு கிடைப்பதும் கேள்விக்குறி தான் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

காலம் மாறும், காட்சியும் மாறும் தானே.!

kanguva to theater agreements broblems
kanguva to theater agreements broblems