Pushpa 2

விஜய்யின் கடைசிப் படம் தளபதி 69: எப்போது ரிலீஸ்?

விஜய்யின் அரசியல் பிரச்சாரத்திற்கு ஆயுதமாகப் பயன்படும் வகையில் தளபதி-69 படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் எப்போது வெளியிடப்படுகிறது என்ற தகவல் பார்ப்போம்..

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசிப் படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜனநாயகம்’ அல்லது ‘வெற்றி நமதே’ என்ற தலைப்புகள் எல்லாம் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகி வருகிறது.

படத்தில், விஜய்யின் அரசியல் வசனங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஒரு ஆயுதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

2026-ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தளபதி 69 படம் 2025ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரத்தை பேசும் படமாக தளபதி 69 இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பாபி தியோல், மோனிஷா, பிரியாமணி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையமைக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் வரும் 2025 ஆம் ஆண்டு மாவட்டந்தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளும் நிலையில் தளபதி 69 படத்தை முன்கூட்டியே முடிக்கும் விறுவிறுப்பில் உள்ளனர்.

இன்னும் 3 மாதங்களில் படத்தை முடிக்க இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு சம்பளமாக ரூ.275 கோடியும், பூஜா ஹெக்டேவிற்கு ரூ.6 கோடியும் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவித்து சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்கட்டும்.!

thalapathy 69 shooting by april 2025 for vijay
thalapathy 69 shooting by april 2025 for vijay