Kanchana 3 Hit
Kanchana 3 Hit

Kanchana 3 Hit :  ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது.

வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

மனதை கொள்ளையடிக்கும் மெஹந்தி சர்க்கர்ஸ் படத்தின் கோடி அருவி கொட்டுதே பாடல்.!

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக நாம் சொல்லியிருந்தோம். இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் 70 கோடி வசூல் செய்துள்ளதாம்.

மாநாடு அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு – ரசிகர்கள் கொண்டாட்டம்.!

இதன்மூலம் காஞ்சனா 2-விற்குப் பின் இரண்டாவது முறையாக லாரன்ஸ் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

இதைதொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தற்போது லாரன்ஸ் இயக்கி வருகிறார்.