ஈஸ்வரி கசாயம் கொடுக்க பேபி ரகசியத்தை உளறியுள்ளார் கோபி. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கிச்சனுக்கு வந்த ராதிகா தாளிப்பு வாசனை தாங்காமல் வாந்தி எடுக்க செல்வி இந்த அம்மா என்ன புள்ளத்தாச்சு பொண்ணு மாதிரி தாளிப்பு வாசனைக்கு எல்லாம் வாந்தி எடுக்குது என கேட்கிறார். 

பிறகு ராதிகா மீண்டும் வர அமிர்தா உடம்பு ஓகேனு தானே சொன்னீங்க என்று கேட்க ஆமாம் ஓகே மாதிரி தான் இருந்தது என சமாளிக்கிறார். ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து யார் வாந்தி எடுத்தது? நீயா என அமிர்தாவை கேட்க அமிர்தா ராதிகாவை கை காட்டுகிறார். 

ராதிகா மேலே சென்றதும் ஆஸ்பிடல் போய் வந்தாச்சு, மாத்திரை சாப்பிட்டாச்சு. அப்படி இருந்தும் வாந்தி வருதுனா என்னவா இருக்கும் என யோசிங்கிறார். பிறகு செழியன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க ஜெனி பல பேரை சொல்லி கொஞ்சுறதுக்கு ஒரு நல்ல பேரா வைக்கலாம்ல என ஃபங்ஷன் குறித்து பேசுகிறார். 

அதை தொடர்ந்து செழியன் ஒரு நாலைந்து பேரை சொல்ல ஜெனி அதெற்கெல்லாம் நோ சொல்கிறார். நான் ஒரு பேரை சொல்றேன் என மாலினி பெயரை சொல்லி கடுப்பாக்குகிறார். பிறகு கோபி கீழே வர ஈஸ்வரி இன்னுமா அவளுக்கு உடம்பு சரியாகல. கசாயம் வச்சி கொடுத்தா எல்லாம் சரியாகிடும் என்று சொல்கிறார். 

கோபி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல ஈஸ்வரி நீ சும்மா இருடா என பாக்கியாவை சுடு தண்ணி வைக்க சொல்ல அவர் வோலையா இருக்கேன் என்று மறுக்கிறார். ஒரு சின்ன வேலை தானே என்று ஈஸ்வரி சொல்ல சின்ன லேலையோ, பெரிய வேலையோ யாருக்கு செய்யுறோம் என்பது ரொம்ப முக்கியம் என சொல்ல ஈஸ்வரியே கிச்சனுக்கு சென்று தண்ணீர் வைத்து ஓமம் எங்க இருக்கு, சீரகம் எங்க இருக்கு என கேள்வி கேட்கிறார். 

எல்லாம் இந்த கபோர்ட்ல தான் இருக்கு, அப்படி இல்லனா வீட்ல இல்லனு அர்த்தம். உங்க பையன் சும்மா தானே இருக்காரு ‌அனுப்பி வாங்கிட்டு வர சொல்லி கசாயம் போடுங்கள் என வெளியே வருகிறார் பாக்கியா. ஈஸ்வரி கசாயத்தை போட்டு ராதிகாவை கூப்பிட்டு குடிக்க சொல்ல ராதிகாவும் குடிக்க போக கோபி நோ நோ ராதிகா பேபிக்கு கசாயம் எல்லாம் ஒத்துக்காது என சொல்கிறார். 

பேபியா என்று ஈஸ்வரி கேட்க கோபி என் செல்லம் ராதிகாவை தான் சொன்னேன் என சமாளிக்கிறார். அவ இப்ப தான் மாத்திரை போட்டா கொஞ்ச நேரம் கழித்து நானே குடிக்க வைக்கிறேன் என சமாளித்து மேலே கூட்டி செல்ல ராதிகா எதுக்கு குடிக்க வேணானு சொன்னீங்க என்று கேள்வி கேட்கிறார். டாக்டர் என்ன சொன்னாங்க? நான் கொடுக்கிற மாத்திரையை தவிர வேற எதுவும் சாப்பிட கூடாதுனு சொன்னாங்க தானே என் நினைவுபடுத்துகிறார். 

பிறகு எல்லோரும் உட்கார்ந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க பாக்கியா பேர் வைக்கலாம் என பேச்சை எடுக்க ராமமூர்த்தி இந்த வாரத்தில் மூணு நாள் நல்ல நாள் இருக்கு என சொல்கிறார். அடுத்ததாக ஜெனி நான் ஒரு பேரை சொல்றேன் என்று சொல்ல செழியன் பதற மாலினி என சொல்ல வந்து பிறகு மானசி என மாத்தி சொல்கிறார். 

பிறகு பேரை தேர்வு செய்யும் வேலையை ஈஸ்வரியிடம் ஒப்படைக்கின்றனர். அடுத்ததாக பழனிச்சாமி கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணி என் அம்மா ஆசையை நிறைவேற்றுகிறேன் என சொல்லி வெளியே வந்து அக்காவிடம் பேசிக் கொண்டிருக்க பாக்கியா இங்கு வருகிறார். தொந்தரவு பண்ணிட்டனா என்று கேட்க பழனிச்சாமி இது உங்க வீடு மேடம், நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.