மல்லி சீரியல் காரணமாக சன் டிவியில் பழைய சீரியல்கள் டைம் மாற உள்ளது.
Time Change Details of Sun Tv Serials : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. காலை முதல் இரவு வரை சன் டிவி சீரியல்களை பார்த்து ரசிக்கும் மக்கள் உலக முழுவதும் உண்டு.
இந்த நிலையில் இந்த வாரத்துடன் அன்பே வா சீரியல் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அதற்கு மாற்றாக மல்லி என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில் பழைய சீரியல்கள் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அதன்படி இனியா சீரியல் இனி தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் மிஸ்டர் மனைவி சீரியல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.