விஜயாவிடம் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளார் ரோகிணி. 

தமி‌ழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய ரோகினிக்கு பட்டை போட்டு விட்ட விஜயா அவரை பிள்ளையார் சன்னதிக்கு அழைத்து சென்று சாமி கும்பிட வைத்து தோப்புக் கரணம் போட வைக்கிறார். முத்து இங்கு வந்து கோர்ட்ல வாதாட இங்க வந்து பரிகாரம் பண்ணா பார்லர் அம்மா அப்பா வெளிய வந்துடுவாரா? இதுல என்ன வேற வர சொல்லிட்டீங்க, ஏன் நான் வரலனா சாமி மலேஷியா சம்மந்தியை வெளியே விட மாட்டாரா என்று கேட்க விஜயா மீனா இது சாமி விஷயம் அவனை அமைதியா இருக்க சொல்லு என சொல்கிறார். 

ஒரே ஒரு தோப்புக்கரணம் போட்டு விட்டு ரோகினி அவ்ளோ தானா? போலாமா என்று கேட்க இரு மா, இப்போ தான் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம் என அம்மன் சன்னதிக்கு அழைத்து சென்று விடுகிறார். பிறகு கற்பூரம் ஏற்றணும் என்று சொல்ல மனோஜ் தட்டுலயே ஏத்திடலாமா என்று கேட்கிறார். இல்ல கையில் ஏத்தணும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். 

ரோகிணி வேண்டாம் ஆன்ட்டி என கத்தி சத்தம் போட யார் பேச்சையும் கேட்காத விஜயா கையை பிடித்து கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காட்ட ஆன்ட்டி எரியுது என அலறுகிறார் ரோகினி‌. பிறகு அங்கபிரதர்ஷணம் செய்ய வைக்கிறார்‌. 

மறுபக்கம் காரில் இருக்கும் ஜீவா வெளியே வந்து நிற்க மனோஜ் போன் வந்ததால் வெளியே வர அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி ஒளிகிறார். மனோஜ் போன் பேசிக் கொண்டே கார் பக்கத்தில் வர ஜீவா முகத்தை மறைத்தபடி உட்கார்ந்து இருக்கிறார். 

முத்து எங்க அம்மா உன்னை கொடுமை பண்ணி வீட்டை விட்டு துரத்துவாங்கனு நெனச்சேன். ஆனால் இப்போ பார்லர் அம்மா வசமா மாட்டி இருக்கு. கொடுக்கிற டார்ச்சர்ல அதுவே வீட்டை விட்டு ஓடிடும் போல என்று சொல்லி வெளியே வருகிறார். 

பிறகு மனோஜை தள்ள சொல்லி காரை எடுத்துக் கொண்டு கிளம்ப ஜீவா அவர் கண்ணில் படாமல் தப்பிக்கிறார். அடுத்ததாக ரோகினியை சாமி சன்னதிக்கு கூட்டிச்சென்று சாமி கும்பிட சொல்கின்றனர். ஐயர் உங்க அப்பாவோட பேர் என்ன என்று கேட்க ரோகினி முழிக்கிறார். பிறகு தனசேகர் என்று சொன்னது ராசி நட்சத்திரம் கேட்க மேஷ ராசி பரணி நட்சத்திரம் என பொய் சொல்ல அந்த ராசிக்கு இந்த நட்சத்திரம் வராது என்று மடக்குகின்றனர்.  மீனா அஸ்வினி நட்சத்திரம் இந்த மாதிரி தான் வரும் என மூன்று  நட்சத்திரங்களை சொல்ல ரோகிணி அஸ்வினி நட்சத்திரம் தான் என சமாளிக்கிறார். 

அடுத்ததாக தன்னுடைய தோழி வித்யாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி புலம்புகிறார். சரி இந்த விரதத்தை இருந்து உன் உடம்புயாவது குறைத்துக்கொள் என்று சொல்கிறார். அதன் பிறகு சிக்கன் வாங்கி சாப்பிட்ட ரோகினி தனக்கும் கேட்க வித்யா இது சாப்பிட்ட தெய்வ குத்தம் ஆகிடும் என்று கொடுக்க மறுக்கிறார். 

வீட்டுக்கு வந்து ரோகிணி கை, கால் எல்லாம் வலிக்குது என்று டயர்டாக உட்கார்ந்து இருக்க மனோஜ் கை கால் பிடித்து விட இவர்கள் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டு வந்த விஜய்யா மனோஜை வெளியே துரத்துகிறார். 48 நாளைக்கு அவள் கிட்டயே வரக்கூடாது என சொல்கிறார். 

அடுத்து ஸ்கூட்டி நீ ஆர்டர் செய்யப் போறேன் என்று சொல்ல மீனா நான் வாங்கிட்டு வந்து செஞ்சி தரேன் என்று சொல்ல விஜயா ரோகிணி விரதம் இருக்கும்போது அதெல்லாம் சாப்பிடக்கூடாது என சொல்கிறார். வீட்டுக்கு வந்த முத்து ரோகிணியை கலாய்த்து எடுக்கிறார். அண்ணாமலை ரோகினிக்கு சாப்பாடு குடுத்தியா என்று கேட்க விஜயா மீனாவை அவளுக்கு பிடித்ததை சமைச்சு கொடு என்று சொல்கிறார். 

உடனே முத்து அம்மா சொன்னது அம்மாவே மறந்துட்டாங்க போல அவங்களுக்கு தேவையானத அவங்க தான் சமைச்சு சாப்பிடணும் என்று ஞாபகப்படுத்துகிறார். இதனால் விஜயா ஆரோக்கியமான இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.