KamalHaasan Next Movie
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kamalhaasan Next Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான இந்தியன் 2-ல் நடித்து வருகிறார்.

இப்படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் உயிரிழப்பால் கமல்ஹாசன் அடுத்ததாக லைகா தயாரிப்பில் நடிக்க இருந்த தலைவன் இருக்கிறான் என்ற படம் தகராறில் வந்து நிற்கிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் வேண்டாம்.. கட் அண்ட் ரைட்டாக கூறி விட்ட விஜய் – காரணம் என்ன தெரியுமா?

இந்த நிலையில் கவுதம் மேனன் கமல்ஹாசனை சந்தித்து வேட்டையாடு விளையாடு படத்தின் பார்ட் 2 கதையை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக ஐசரி கணேஷ் தயாரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனை உண்மை என ஓரளவிற்கு உறுதி செய்யும் வகையில் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

அதாவது ஜிப்ஸி படத்தை பார்த்து கமல்ஹாசன் ராஜு முருகனை பாராட்டி இருந்தார். அந்த புகைப்படத்தில் கமலுடன் கெளதம் மேனனும் ஐசரி கணேஷும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.