cheran
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ள இயக்குனர் சேரனுக்கு சென்னை கமலா திரையரங்கம் பாராட்டு விழா நடத்தியுள்ளது.

Kamala theater appreciate welcome back cheran – பிக்பாஸ் வீட்டில் தனது அமைதியான நடவடிக்கைகள் மூலம் பலரையும் கவர்ந்தவர் சேரன். லாஸ்லியாவை மகளாக பாவித்து கவின் விவகாரத்தில் அவருக்கு அறிவுரை வழங்கினார். இதன் மூலம் பல பெண் ரசிகைகளின் மனதையும் அவர் வென்றார். ஆனால், யாரும் எதிர்பார்த்திராத வகையில் அவர் வெளியேற்றப்பட்டார்.

தர்ஷனின் வெளியேற்றத்தில் நடந்தது என்ன? – உண்மையை உடைத்த முன்னாள் போட்டியாளர்.!

இந்நிலையில், சென்னை கமலா திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க சென்ற அவருக்கு அங்கு ‘வெல்கம் பேக் சேரன்’ என்கிற தலைப்பில் விழாவே எடுத்து விட்டனர். இதுபற்றி மேடையில் பேசிய சேரன் ‘ நான் படம் பார்க்க வந்தேன். இப்படி பாராட்டு விழா நடத்துவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை. அதற்கு நன்றி. நடிகர் விஜய் சேதுபதி கூறியே நான் பிக்பாஸ் விழாவுக்கு சென்றேன். இளைய தலைமுறைக்கு உங்களை தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு வீட்டிலும் நீங்கள் நுழைவீர்கள். எனவே, அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்’ என அவர்தான் அறிவுறுத்தினார். அவரை வைத்து விரைவில் ஒரு படத்தை இயக்குவேன்’ என அவர் பேசினார்.

cheran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here