Pushpa 2

நடிகர் ஜெயராம் குடும்பத்தினர் ஒன்றாக ஹனிமூன் ட்ரிப்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

நடிகர் ஜெயராம் குடும்பத்தினர் ஒன்றாக ஹனிமூன் சென்ற நிகழ்வு குறித்து காண்போம்..

நடிகர் ஜெயராம் சமீபத்தில் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில், அடுத்ததாக தனது மகன் திருமணத்தையும் முடித்து வைத்துள்ளார்.

பின்லாந்து நாட்டுக்கு ஜெயராம் அவரது மனைவி பார்வதி மற்றும் மகள் மாளவிகா ஜெயராம் அவருடைய கணவர் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரினி காளிங்கராயர் என 3 ஜோடிகள் ஒன்றாக குடும்பமாக ஹனிமூனுக்கு சென்றுள்ளனர்.

டிசம்பர் மாத பனி மழையை ரசிக்க சரியான இடம் பின்லாந்து தான் என ரசிகர்கள் அவர்களது புகைப்படத்தை பார்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். ‘ஹனிமூனுக்கும் குடும்பத்துடன் சென்றுள்ளாரே காளிதாஸ் ஜெயராம் அவருடைய மனசே மனசு தான்’ என்றும் சூப்பர் குடும்பம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

1993-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி பிறந்த காளிதாஸ் ஜெயராம் நேற்று தனது பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு, கணவருடன் தனியாக கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தாரிணி ஹேப்பி பர்த்டே கண்ணம்மா என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொதுவாக பெண்களைத்தான் ஆண்கள் கண்ணம்மா என கொஞ்சுவார்கள். இங்கே இதுவே வித்தியாசமாகவும் க்யூட்டாகவும் இருக்கே என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். தனது மனைவியின் வாழ்த்துக்கு கீழே தேங்க் யூ பொண்டாட்டி என காளிதாஸ் ஜெயராமும் காதலுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதேபோல, எப்போதுமே காதலுடன் இருவரும் ஒன்றாகவும் குடும்பத்துடன் கூட்டாகவும் இருங்க என ரசிகர்கள் பின்லாந்து பனி மழையை தாண்டி வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சமீப காலமாக ஆரம்பத்தில் இருக்கும் காதல் பிரபலங்கள் மத்தியில் சில நாட்களில் குறைந்து வருவதால் இப்படி பதிவிட்டுள்ளனர்.

அப்பா ஜெயராம் 32 ஆண்டுகளை கடந்தும், மாறாத காதலுடன் மனைவியை காதலிப்பது போல, காளிதாஸும் கடைப்பிடிக்க வாழ்த்துவோமே.!

kalidas jayaram celebrates his honeymoon and birthday
kalidas jayaram celebrates his honeymoon and birthday